திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வில்பட்டி கிராம உதவியாளராக மாரி என்பவர் பணி புரிந்து வருகிறார். இவர் வழக்கம் போல கொடைக்கானல் வட்டாட்சியர் அலுவலகம் சென்றுள்ளார்.
அப்போது வட்டாட்சியர் சந்திரன், மாரியை அழைத்து ஒருமையில் பேசி, தகாத வார்த்தையால் திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாரி பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனைக் கண்ட சக ஊழியர்கள் அவரை மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் இதற்குத் தமிழ்நாடு அரசு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதையும் படிங்க: மின்கட்டணம் செலுத்த கால அவகாசம் நீட்டிப்பு!