ETV Bharat / state

செல்போன் கடையில் அரசு காலாண்டு தேர்வு வினாத்தாள்; வைரலாகும் வீடியோ - Question Paper

செல்போன் கடையில் அரசு காலாண்டு தேர்வுகான வினாத்தாள் வைக்கப்பட்டிருந்த விவகாரம் தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.

செல்போன் கடையில் அரசு காலாண்டு தேர்வு வினாத்தாள்; வைரலாகும் வீடியோ

author img

By

Published : Sep 27, 2022, 10:04 AM IST

திண்டுக்கல்: கடந்த காலங்களில் காலாண்டு,அரையாண்டு,முழு ஆண்டு தேர்வுகள் தமிழ்நாடு முழுவதும் பொது வினாத்தாள் அச்சடிக்கப்பட்டு தேர்வுகள் நடைபெற்றது.

ஆனால் இந்த ஆண்டு நேரமின்மை காரணமாக நான்காம் மற்றும் ஐந்தாம் வகுப்பு பொது தேர்வுக்கு மாவட்ட அளவில் பொதுவான வினாத்தாளை மாவட்ட கல்வி அலுவலகம் தயாரித்து,அதனை பள்ளித் தொகுப்பு கருத்தாய்வு மையம் மூலம் பள்ளிகளுக்கு பிரித்து வழங்கும்படி பள்ளி கல்வித்துறை இயக்குனரகம் உத்தரவிட்டிருந்தது.

இதில் எந்த குளறுபடியும் வராமல் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டது.ஆனால் கொடைக்கானல் மலை கிராமங்களுக்கு செல்ல உள்ள வினாத்தாள்கள்,வத்தலகுண்டில் உள்ள ஒரு தனியார் செல்போன் கடையில் கொடுக்கப்பட்டு அந்தந்த பகுதியில் உள்ள ஆசிரியர்களை அந்த கடைக்கு சென்று எடுத்துச் சொல்லுமாறு கூறப்பட்டுள்ளது.

செல்போன் கடையில் அரசு காலாண்டு தேர்வு வினாத்தாள்

அரசு வினாத்தாள்கள் ஒரு தனியார் செல் கடையில் இருப்பதைக் கண்டு ஆசிரியர்களும் பொதுமக்களும் அதிர்ச்சி அடைந்தனர். வினாத்தாளை பெற்றுச் சென்ற சில மலை கிராம ஆசிரியர்கள் அதில் பல வினாத்தாள்கள் இல்லாமல் இருப்பதை கண்டு திருப்பி அதே கடைக்கு சென்று கொடுத்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் தவறு செய்த கல்வி துறை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.

இதையும் படிங்க: கருணாநிதி உருவப்படத்திற்கு முன் மின் வாரிய ஊழியர் திமுக அரசை விமர்சனம்...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.