ETV Bharat / state

சிறந்த 100 பல்கலைக்கழகங்களில் ஒன்றாகத் தேர்வான காந்திகிராம் பல்கலைக்கழகம்

திண்டுக்கல்: காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம், தொடர்ந்து நான்காவது ஆண்டாக, சிறந்த 100 தேசிய உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

author img

By

Published : Jun 30, 2020, 4:34 AM IST

காந்திகிராம்
காந்திகிராம்

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் அமைந்துள்ள காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகம் தேசிய தரவரிசைப் பட்டியலில் 91ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.

இது குறித்து அந்தப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “2020ஆம் கல்வி ஆண்டிற்கான தேசிய தரவரிசைப் பட்டியலில் காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம் 91ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. 2017ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக 100 தேசிய உயர்கல்வி நிறுவனங்களில் ஒன்றாக காந்திகிராம கிராமிய நிகர்நிலை பல்கலைக்கழகம் இருந்து வருகிறது.

பிற நிறுவனங்களில் இருந்து வேறுபட்டு கிராமப்புற மாணவர்களுக்கான, கிராம மக்களின் முன்னேற்றத்திற்கான தனித்துவமான பல்கலைக்கழகமாக திகழ்ந்து வருகிறது" என்று தெரிவித்துள்ளது.

காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகத்தில் கற்பித்தல், ஆராய்ச்சி, கிராமப்புற மாணவர்கள் மேம்பாடு மற்றும் விரிவாக்கப் பணிகள் அடிப்படையில் எட்டு கல்வி பள்ளிகள், 16 பயிற்றுத் துறைகள், 12 சிறப்பு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இது மட்டுமின்றி இளநிலை, முதுநிலை, எம்ஃபில் முனைவர் பட்ட ஆய்வுகள், வேளாண்மை மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த 73 பட்டம், பட்டயப் படிப்புகள் உள்ளன.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.