திண்டுக்கல்: தமிழ்நாடு முழுவதும் உள்ளாட்சித் தேர்தல் களம் சூடுபிடித்துவரும் நிலையில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேருராட்சியில் 18 வார்டுகளுக்கான அறிமுகக் கூட்டம் நேற்று (பிப்ரவரி 6) நத்தம் தனியார் மகாலில் நடைபெற்றது.
9 லட்ச குடும்ப அட்டைகள்
இந்தக் கூட்டத்திற்கு அமைச்சர் சக்கரபாணி தலைமையேற்றுப் பேசும்போது, ”தமிழ்நாட்டில் உணவுத் துறை சார்பில் தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்பது லட்சம் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசின் சாதனைகளான மகளிருக்கு இலவசப் பேருந்து, வாழ்வாதாரம் இழந்த குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ. 4000 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் மக்களுக்கான ஆட்சி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றுவருகிறது.
நத்தத்தில் கல்லூரி
நத்தம் பேருராட்சியில் திமுக வேட்பாளர் சேக் சிக்கந்தர் பாட்சா வெற்றிபெற்று பேருராட்சித் தலைவரானால் நத்தத்திற்கு கல்லூரி, நத்தம் பகுதிகளில் பாதாள சாக்கடை, மின்மயானம், வீடு இல்லாத பொதுமக்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பு, நூலகம், மா, புளி விவசாயிகளுக்கு குளிர்சாதன கிட்டங்கும் அமைத்துத் தரப்படும்.
நத்தத்தில் 18 வார்டுகளிலும் திமுக, கூட்டணி கட்சியினரை வெற்றிபெறச் செய்ய வேண்டும்” என்றும் சக்கரபாணி கேட்டுக்கொண்டார். இக்கூட்டத்தில், நத்தம் தொகுதி முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் ஆண்டி அம்பலம், மாநில தலைமைச் செயற்குழு உறுப்பினர் விஜயன் ஆகியோரும் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.
இதையும் படிங்க:காணொலி வாயிலாக பரப்புரையைத் தொடங்கிய முதலமைச்சர்!