திண்டுக்கல்: பழனி அருகே உள்ள சத்திரப்பட்டியில் வசித்துவருபவர் கர்ணன். விவசாயியான இவருக்கு சொந்தமாக உள்ள விவசாய நிலத்தில் கோழிப்பண்ணை நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் கோழிப்பண்ணையில் திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.
இதையடுத்து கர்ணன் தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்துவந்த தீயணைப்பு படையினர் தீயை போராடி அணைத்தனர். இருப்பினும் இந்த விபத்தில் பண்ணையில் இருந்த 5,000 கோழிக்குஞ்சுகள் தீயில் கருகி பலியானது.
இந்த விபத்து குறித்து கர்ணன் கொடுத்த புகாரின்பேரில் சத்திரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்திற்கு மின்கசிவு காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணமாக என விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க:இந்து என்பது மதம் அல்ல நாடு; சட்டப்படி ராஜராஜ சோழன் இந்து மன்னனே - ஹெச்.ராஜா