ETV Bharat / state

கல்லூரி மாணவர்களுக்கு நடந்த ஃபேஷன் ஷோ

திண்டுக்கல்: தனியார் பொறியியல் கல்லூரியில் ஜவுளி பொறியியல் துறை சார்பாக நடைபெற்ற உலக அளவிலான ஜவுளி ஆராய்ச்சி மற்றும் கருத்தரங்கத்தில் கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான ஃபேஷன் ஷோ நடைபெற்றது.

தனியார் பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்கு இடையே நடைபெற்ற பேஷன் ஷோ

author img

By

Published : Feb 8, 2020, 4:30 PM IST

திண்டுக்கல் மாவட்டம் ஆர்விஎஸ் பொறியியல் கல்லூரியில், ஜவுளி பொறியியல் துறை சார்பாக உலக அளவிலான ஜவுளி ஆராய்ச்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் இரண்டாம் நாளான இன்று கல்லூரி மாணவ, மாணவிகளுக்கிடையேயான ஃபேஷன் ஷோ நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளில் ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிந்த டிம் ஜோசப் மெண்டோசா மற்றும் மாடல் தீபிகா பால் நடுவர்களாக கலந்துகொண்டு போட்டியாளர்களை மதிப்பிட்டனர்.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் மாணவ, மாணவிகள் ஆர்வமாக பங்கேற்றனர். குறிப்பாக சணல் மூலம் தயாரிக்கப்பட்ட ஆடைகள் மிகவும் வித்தியாசமான, அழகான ஆடையாகவும் அனைவரது கவனத்தையும் கவர்ந்தது.

இப்போட்டியில் பங்கேற்ற கோவை மாணவிகள் தங்களது அனுபவத்தை கூறுகையில், ”இது போன்ற நிகழ்ச்சிகள் அதிக அளவில் நடைபெற வேண்டும். ஏனெனில் இந்தப் படிப்புகள் குறித்தும் இதன் அவசியம் குறித்தும் அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும். பொறியியல் என்றால் ஒருசில துறைகள் மட்டுமே அனைவரது நினைவிலும் வருகிறது. ஆனால் அப்படியல்ல. பொறியியலில் எத்தனையோ துறைகள் மாணவர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் புதிய விஷயங்களை கற்கும் வகையிலும் உள்ளது.

தனியார் பொறியியல் கல்லூரியில் மாணவர்களுக்கு இடையே நடைபெற்ற பேஷன் ஷோ

அவற்றை அவர்கள் தேர்வு செய்ய இது போன்ற நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதேபோல் இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற இங்கு வந்ததன் மூலம் கோவை போன்ற பெருநகரங்களிலும் திண்டுக்கல் போன்ற சிறு நகரத்திலும் எப்படியான வித்தியாசங்கள் இருக்கிறது என்பதை அறியமுடிகிறது. மேலும் இங்குள்ள மாணவிகளிடமிருந்து நாங்கள் எவ்வாறு வித்தியாசப்படுகிறோம் என்பதையும் அறியமுடிகிறது. இது போன்ற நிகழ்ச்சிகள் மூலம் நாங்கள் நட்பு பாராட்டுவது புதிய மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது” என்றனர்.

இதையும் படிங்க:

ஜவானி ஜானிமன்' - ஸ்பெஷல் ஷோவுக்கு வந்த ஷில்பா ஷெட்டி, ஜெனிலியா

Intro:திண்டுக்கல் 7.2.20

தனியார் கல்லூரியில் கல்லூரி மாணவர்களுக்கு இடையேயான பேஷன் ஷோ நடைபெற்றது.

Body:திண்டுக்கல் மாவட்டம் ஆர்விஎஸ் பொறியியல் கல்லூரியில் ஜவுளி பொறியியல் துறை சார்பாக உலக அளவிலான ஜவுளி ஆராய்ச்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் இரண்டாம் நாளான இன்று கல்லூரி மாணவ மாணவியருக்கு இடையேயான ஃபேஷன் ஷோ நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு நடுநிலையாளர்களாக அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளில் ஆடை வடிவமைப்பாளராக பணிபுரிந்த டிம் ஜோசப் மெண்டோசா மற்றும் மாடல் தீபிகா பால் என்பவரும் போட்டியாளர்களை மதிப்பிட்டனர்.

இந்நிகழ்ச்சியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்தில் இருந்தும் மாணவ மாணவிகள் ஆர்வமாக பங்கேற்றனர். குறிப்பாக சணல் மூலம் தயாரிக்கப்பட்ட ஆடைகள் மிகவும் வித்தியாசமான மற்றும் அழகான ஆடையாக இருந்தது. இது அனைவரது கவனத்தையும் பெற்றது.

இப்போட்டியில் பங்கேற்ற கோவை மாணவிகள் தங்களது அனுபவத்தை கூறுகையில், இது போன்ற நிகழ்ச்சிகள் அதிக அளவில் நடைபெற வேண்டும். ஏனெனில் இந்தப் படிப்புகள் குறித்தும் இதன் அவசியம் குறித்தும் அனைவருக்கும் தெரியப்படுத்த வேண்டும். இன்ஜினியரிங் என்றால் ஒருசில துறைகள் மட்டுமே அனைவரது நினைவிலும் வருகிறது. ஆனால் அப்படியல்ல பொறியியலில் எத்தனையோ துறைகள் மாணவர்கள் தங்களை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் புதிய விஷயங்களை கற்கும் வகையிலும் உள்ளது. அவற்றை அவர்கள் தேர்வு செய்ய இது போன்ற நிகழ்ச்சிகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதேபோல் இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற இங்கு வந்ததன்மூலம் கோவை போன்ற பெருநகரங்களிலும் திண்டுக்கல் போன்ற சிறு நகரத்திலும் எப்படியான வித்தியாசங்கள் இருக்கிறது என்பதை அறியமுடிகிறது. மேலும் இங்குள்ள மாணவிகளிடம் இருந்து நாங்கள் எவ்வாறு வித்தியாசம் படுகிறோம் என்பதையும் அறியமுடிகிறது. இது போன்ற நிகழ்ச்சிகள் மூலம் நாங்கள் நட்பு பாராட்டுவது புதிய மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது என்று கூறினர்.

Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.