திண்டுக்கல்: கொடைக்கானல் கீழ்மலை, ஆடலூர், பன்றிமலை, அமைதிச்சோலை உள்ளிட்ட பகுதிகளில் இலவம்பஞ்சு அதிகமாக பயிரிடப்படுகின்றன.
ஒரு ஆண்டில் ஜூன், ஜூலை ஆகிய இரண்டு மாதங்கள் மட்டுமே அறுவடை நடைபெறும். தற்போது காய் முதிர்ந்த நிலையில் காணப்படுவதால், இலவம் பஞ்சு சேகரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கடந்த இரண்டு வருடங்களாக தேவையான மழைப் பொழிவு இல்லாததால் வரத்து குறைந்து காணப்பட்டது. வரத்து குறைவால் இலவம் பஞ்சு அதிக விலை போகும் என விவசாயிகள் ஆர்வமுடன் இருந்தனர்.
இந்நிலையில் தற்போது 20 கிலோ எடை கொண்ட இலவம் பஞ்சு மூட்டை, ரூ. 4 ஆயிரத்துக்கு மட்டுமே விற்பனையாவதால், பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
லாபகரமான விலை இல்லாத காரணத்தால், தோட்டத் தொழிலாளர்களுக்கான ஊதியமும் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் அரசே இலவம்பஞ்சுகளை உரிய விலைக்கு கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: மேட்டூர் அணை பூங்கா 2 நாள்கள் மூடல்!