லாரி ஓனர், ஆன்லைனில் சிமெண்ட் கம்பி வியாபாரம் என பல தொழில் செய்து நஷ்டமடைந்த விஜயன், தான் காதலித்து திருமணம் செய்து கொண்ட மனைவி சரிதாவை ஏமாற்ற உதவி காவல் ஆணையர் அவதாரத்தை கையில் எடுத்திருந்தார்.
2014 - 15 ஆண்டுகளில் விஜயன் சென்னையில் செய்தியாளராக பணியாற்றிய போது, செய்தி சேகரிக்க சென்ற இடத்தில் பல்வேறு மாநில முதலமைச்சர்கள், உயர் காவல் அலுவலர்கள் என பலருடன் புகைப்படங்கள் எடுத்துள்ளார்.
அதனை தற்போது தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டது மட்டுமின்றி, காவல் துறை உடை அணிந்த படங்களையும் பதிவிட்டுள்ளார். இதன் மூலம், அவரது பேஸ்புக் நண்பர்கள் வட்டாரம் அதிகரித்துள்ளது.
குறிப்பாக, பேஸ்புக்கில் நண்பர்களான பெண்கள் பலரிடம் தொலைபேசி மூலம் பேசி நட்பை பலமாகியுள்ளார். இறுதியில் தனது பேச்சுத் திறமையால் அப்பெண்களிடம் அவசரத் தேவை எனக் கூறி, ரூபாய் 10 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை வாங்கியுள்ளார்.
மாத சம்பளம் என தனது மனைவி சரிதாவுக்கு அனுப்பியது போக, மீதம் இருந்த பணத்தை வைத்து கொண்டு ஊர் ஊராக சுற்றிவந்துள்ளார் . நுனிநாக்கில் விளையாடும் ஆங்கில பேச்சால் போகுமிடமெல்லாம் மரியாதை கிடைத்துள்ளது. தங்குவதற்கு ஓசியில் நட்சத்திர விடுதிகள், வகை வகையான சாப்பாடு என கடந்த நான்கு மாதங்களாக வாழ்க்கையை ஜாலியாக அனுபவித்து வந்துள்ளார் .
கடலூரில் ஆன்லைன் பிசினஸில் சிமெண்ட் கம்பி வாங்கித் தருவதாக கூறி, மூன்று லட்சம் ரூபாய் ஏமாற்றி இருப்பதாக ஒருவர் மட்டுமே புகாரளித்து இருப்பதாகவும், இதுவரை விஜயனிடம் பணத்தை ஏமாந்த பெண்கள் யாரும் புகார் அளிக்கவில்லை எனவும் காவல் துறையினர் கூறுகின்றனர்.
ஆனால், விஜயன் கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே, அவரது பேஸ்புக் பக்கத்திலிருந்து 30க்கும் மேற்பட்ட பெண்கள் நட்பை துண்டித்துவிட்டு வெளியேறியதும், ஏராளமான படங்கள் அழிக்கப்பட்டு இருப்பதும் சைபர் கிரைம் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
விஜயன் மோசடி செய்தது தொடர்பாக புகாரளித்தால் வழக்குப்பதிவு செய்ய தயாராக இருப்பதாக கூறும் காவல் துறையினர், விஜயனை மீண்டும் நிலக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: குடும்பத் தகராறில் மனைவியின் கழுத்தை அறுத்த கணவன்!