ETV Bharat / state

ஈடிவி பாரத் செய்தி எதிரொலி.. விநோத எறும்புகள் குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு - ஈடிவி பாரத் செய்தி எதிரொலி

ஈடிவி பாரத் செய்தி எதிரொலியாக நத்தம் அருகே வனவிலங்குகளை கொள்ளும் விநோத எறும்புகள் குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

விஞ்ஞானிகள் ஆய்வு
விஞ்ஞானிகள் ஆய்வு
author img

By

Published : Aug 30, 2022, 8:40 PM IST

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உள்ள கரந்தமலை வனப்பகுதியில் பல 100 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட மலைப்பகுதி. இந்த மலைப்பகுதியை சுற்றி பண்ணக்காடு, உலுப்பகுடி, வேலாயுதம்பட்டி, குட்டூர், குட்டுப்பட்டி, சேர்வீடு, ஆத்திப்பட்டி உள்ளிட்ட பல்வேறு மலை கிராமங்கள் உள்ளன. இந்த மலைப்பகுதியில் நடுவே சில ஆண்டுகளுக்கு முன்னர் புதிய வகை விநோத எறும்புகள் பரவியிருந்தது.

இது நாளடைவில் கரந்தமலை வனப்பகுதி முழுவதும் அனைத்து பகுதிகளிலும் பரவியது. தற்போது கடந்த சில நாட்களாக அது சுற்றியுள்ள கிராமப் பகுதிகளிலும் பரவ தொடங்கியுள்ளது. இந்த விநோத வகை எறும்புகள் வனப்பகுதிக்கு சென்றவுடன் மனிதர்கள் உடலில் வேகமாக ஏறுகிறது. குறிப்பாக இந்த எறும்புகள் கண்களை மட்டுமே கடிப்பதாக கூறப்படுகிறது. இந்த எறும்புகள் மனிதர்கள் உடலில் ஏறுவதால் அலர்ஜி மற்றும் கொப்பளங்கள் ஏற்படுகிறது. மேலும் கால்நடைகள் பாதித்ததாக செய்தி வெளியிட்டிருந்தோம்.

விஞ்ஞானிகள் ஆய்வு

இதன் எதிரொலியாக பெங்களூரிலிருந்து விஞ்ஞானிகளின் & ஆராய்ச்சி மாணவர்கள் வேலாயுதம்பட்டியில் 2 தினங்களாக நேரில் வந்து காப்புக்காடு மலைப்பகுதிகளில் ஆய்வு செய்தனர். அவர்களில் ஆய்வை பற்றி அறிக்கை அளித்துள்ளனர்.

மக்களிடம் இருந்து அதிகளவில் புகார்கள் வருவதாலும், சிலர் வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து செல்வதாலும் பூச்சியியல் வல்லுநர்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகள் இவற்றில் கவனம் செலுத்தியுள்ளனர். மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டு அவற்றின் நம்பகத்தன்மை சரிபார்க்கப்பட்டு வருகிறது. அவை மிகவும் ஆபத்தானவை மற்றும் இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் (IUCN) படி, அவை உலகின் முதல் 100 ஆபத்தான உயிரினங்களில் சேர்க்கப்பட்டுள்ளன.

சுற்றுச்சூழல் ஆர்வலரும் வனவிலங்கு ஆய்வாளருமான அசோக சக்கரவர்த்தி கூறுகிறார். எறும்புகளின் தாக்குதல் கேரள காடுகளில் உள்ள பல கிராமங்களில் கடந்த காலங்களில் காணப்பட்டது. இதுகுறித்து கேரள மத்திய பல்கலைக்கழக பிரதிநிதிகள் ஆய்வு நடத்தினர். கடந்த காலத்தை விட தற்போது இந்த எறும்பு இனங்களின் பரவல் அதிகரித்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

தாங்கள் ஆய்வு செய்த காடுகளில் கம்பளிப்பூச்சிகள், பட்டாம்பூச்சிகள், மற்ற பூச்சிகள் மற்றும் ஈக்கள் எண்ணிக்கை குறைந்துள்ளதை கண்டறிந்தனர். ஆசிய மஞ்சள் எறும்புகள் பெரும்பாலும் ஆஸ்திரேலியா மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவில் காணப்படுகின்றன. 5 மி.மீ நீளம் வரை உள்ளன.

அவை மஞ்சள் நிறத்தில் அடர் பழுப்பு நிறத்தில் இருக்கும். அஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவில் இறங்கிய இந்த எறும்புகள், அங்குள்ள லட்சக்கணக்கான சிவப்பு நண்டுகளை கொன்று தின்றுவிட்டன. இதனால் சுற்றுச்சூழல் சமநிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதன் பலனாக, அவற்றில் பல ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு, சில தீர்வுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மருந்துகள் தெளிக்கப்பட்டுள்ளன. ஹெலிகாப்டர்கள் மூலம் தடுக்க, 95-99 சதவீத முடிவுகள் கிடைத்துள்ளதாக, அங்குள்ள விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

சிறிய மின்மினிப் பூச்சியால் இயற்கையான முறையில் இந்த எறும்புகளின் உணவு சங்கிலியை அறுத்து, அவற்றின் சந்ததியை தடுப்பது குறித்தும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர் என விஞ்ஞானிகள் கூறினர்.

இதையும் படிங்க: எல்லோ கிரேஸி எறும்பு கடித்தவுடன் தோல் வியாதி ஏற்படும்.. வனவிலங்கு ஆராய்ச்சியாளர்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.