ETV Bharat / state

தேர்தல் பணிக்கு வந்த இளநிலை உதவியாளர் மரணம் - பழனி முருகன்

திண்டுக்கல்: தேர்தல் பணிக்கு வந்த இளநிலை உதவியாளர் மாரடைப்பால் மரணமடைந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

செந்தில்வேல்
author img

By

Published : Apr 18, 2019, 7:33 AM IST

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்துள்ள சுக்கமநாயக்கன்பட்டி அரசு பள்ளியில் வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில், வாக்குபதிவை நடத்துவதற்காக ஒட்டன்சத்திரத்தை அடுத்துள்ள கரிசல்பட்டி அரசுபள்ளியில் இளநிலை உதவியாளராக பணியாற்றும் செந்தில்வேல் என்பவர் வந்திருந்தார்.

இளநிலை உதவியாளர் மரணம்

அப்போது வாக்குபதிவுக்கான ஏற்பாடு பணிகள் செய்து கொண்டிருந்த போது செந்தில்வேலுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து சக ஊழியர்கள் 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், செந்தில்வேலை பரிசோதனை செய்தபோது ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

தேர்தல் பணிக்கு வந்த அரசு ஊழியர் இறந்துபோன சம்பவம் சுக்கமநாயக்கன்பட்டி கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல். 
ஒட்டன்சத்திரம்&பழனி
ம.பூபதி   ஏப்:17

பழனிக்கு தேர்தல் பணிக்கு வந்த இளநிலை உதவியாளர் மாரடைப்பால் மரணமடைந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்துள்ளது சுக்கமநாயக்கன்பட்டி. இங்கு உள்ள அரசு பள்ளியில்  வாக்களிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வாக்கு பதிவை நடத்துவதற்காக பணிக்கு வந்த‌ அதிகாரி ஒருவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.  உயிரிழந்தவர் ஒட்டன்சத்திரத்தை  அடுத்துள்ள கரிசல்பட்டி  அரசுபள்ளியில் இளநிலை உதவியாளராக பணியாற்றும் செந்தில்வேல் என்பவர் ஆவார்.வாக்கு பதிவுக்கான பணிகளை செய்து கொண்டிருந்தபோது செந்தில்வேலுக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உடனடியாக சகஊழியர்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் கொடுத்துள்ளனர். விரைந்து சென்ற 108 வாகன ஊழியர்கள் செந்தில்வேலை பரிசோதனை செய்தபோது ஏற்கனவே இறந்துபோனது தெரியவந்துள்ளது. தேர்தல் பணிக்கு வந்த அரசு ஊழியர் இறந்துபோன சம்பவம் சுக்கமநாயக்கன்பட்டி கிராமத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.