ETV Bharat / state

TN ED Raid: அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர் வீட்டில் விடிய விடிய நடந்த ரெய்டு நிறைவு! - திமுக ஒன்றிய செயலாளர் வீரா சாமிநாதன்

வேடசந்தூர் திமுக ஒன்றிய செயலாளர் வீரா சாமிநாதன் வீட்டில் துப்பாக்கி ஏந்திய மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் பாதுகாப்புடன் விடிய விடிய 18 மணிநேரம் நடந்த அமலாக்கத்துறை சோதனை நிறைவு பெற்றது.

Enforcement Department
அமலாக்கத்துறை
author img

By

Published : Aug 3, 2023, 11:05 AM IST

செந்தில் பாலாஜியின் ஆதரவாளர் வீட்டில் விடிய விடிய நடந்த ரெய்டு நிறைவு

திண்டுக்கல்: வேடசந்தூர் திமுக தெற்கு ஒன்றிய செயலாளராக இருப்பவர் வீரா சாமிநாதன். இவர் பழனி அருகே உள்ள புஷ்பத்தூரில் சிபிஎஸ்இ (CBSE) பள்ளி ஒன்றை நடத்தி வருவதுடன், தமிழ்நாடு மற்றும் வெளி மாநிலங்களில் நிதி நிறுவனமும் நடத்தி வருகிறார். இந்நிலையில் தொழிலதிபரான இவர் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் நெருக்கமாக இருந்தாக கூறப்படுகிறது.

அதைத் தொடர்ந்து, நேற்று மதியம் சுமார் 2 மணி அளவில் இரண்டு கார்களில் வந்த பத்துக்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் 2 குழுக்களாக பிரிந்து வேடசந்தூர் கொங்கு நகரில் உள்ள சாமிநாதனின் வீட்டிலும், வேடசந்தூரில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் தமுத்துபட்டியில் உள்ள அவரது தோட்டத்து வீட்டில் நேற்று இரவு 11 மணியில் இருந்து திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

சோதனையின் போது வீட்டில் வீரா சாமிநாதன் அவர்களின் தாயார் சரஸ்வதி மட்டுமே இருந்துள்ளார். அவரிடம் செல்போனை வாங்கி வைத்துக் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் மாலை 6.30 மணி வரை சோதனை செய்துள்ளனர். அதன் பின்னர் திமுக ஒன்றிய செயலாளரின் தாயாரிடம் இருந்து கையெழுத்து பெற்றுவிட்டு கிளம்பியுள்ளனர்.

வீட்டிலிருந்து கிளம்பி சென்ற சிறிது நேரத்திலேயே மீண்டும் தமுத்துப்பட்டியில் உள்ள தோட்டத்தை பங்காளவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் காரில் சென்று விசாரணை நடத்தினர். அதன்பிறகு வீட்டில் 30-க்கும் மேற்பட்ட துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு படை வீரர்கள் குவிக்கப்பட்டனர். அவர்கள் வீட்டில் இருந்த திமுக கட்சி நிர்வாகிகளை அப்புறப்படுத்தி வாயில் கதவை சாத்தினர்.

அதனைத்தொடர்ந்து தொடர்ந்து தோட்டத்து பங்காளவில் இருந்த லாக்கர் சாவி இல்லாத காரணத்தால் நீண்ட நேரம் காத்திருந்த அமலாக்கத்துறை அதிகாரிகள் லாக்கர் சாவி எடுத்து வர கூறியுள்ளனர். அதன் பிறகு கோவையில் இருந்து வீரா சாமிநாதனின் பணியாளர் சூர்யா காரில் கொண்டு வந்து சாவியை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார். பின்னர் லாக்கர் சாவியை கைப்பற்றிய அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து இரவில் விடிய விடிய சோதனை நடத்தி வந்தனர்.

சுமார் 15 பேர் கொண்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் தோட்டத்து பங்களாவில் நேற்று மதியம் 2 மணியிலிருந்து இன்று அதிகாலை 5.30 மணி வரை கிட்டத்தட்ட 16 மணி நேர சோதனை நிறைவு பெற்றது. சோதனை முடிவில் சில முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: ஆடிப்பெருக்கு விழா: பாரம்பரியப்படி மாட்டு வண்டிகளில் கிளம்பிய கிராம மக்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.