ETV Bharat / state

'பேத்தியை காதலிக்காதே...' கண்டித்த தாத்தா படுகொலை! - Dindigul

திண்டுக்கல் மாவட்டத்தில், தனது பேத்தியை காதலிக்காதே எனக் கண்டித்த தாத்தாவை, கட்டடத்தில் வைத்து படுகொலை செய்த நபரை, காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

பேத்தியை காதலிக்காதே.. கண்டித்த தாத்தா கட்டிடத்தில் படுகொலை

author img

By

Published : May 19, 2022, 4:25 PM IST

திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு அருகே சித்தரேவு ஊராட்சி அமைதி பூங்காவைச் சேர்ந்தவர், சடையாண்டி. இவரது மனைவி பொன்னுதாயி. இவர்களுக்கு ஐந்து பெண் குழந்தைகள், ஒரு மகன் உள்ளனர். இவர்கள் அனைவரும் திருமணம் முடிந்து தனித்தனியாக வசித்து வருகின்றனர்.

தற்போது சடையாண்டி கூலித்தொழில் செய்துவருகிறார். இதற்கு முன்னதாக தேசிய காடுகள் வளர்ப்புத்திட்டத் தலைவராக இருந்த சடையாண்டி, இரவு நேரத்தில் அமைதிப்பூங்கா பகுதியில் உள்ள வத்தலக்குண்டு வனச்சரகத்திற்கு உட்பட்ட வனத்துறைக்குச் சொந்தமான கட்டடத்தில் தூங்குவதை வழக்கமாக கொண்டிருக்கிறார்.

இந்நிலையில், சடையாண்டி நேற்றிரவு (மே18) வழக்கம்போல வனத்துறை கட்டடத்தில் தூங்கச் சென்றுள்ளார். ஆனால், காலை சடையாண்டி வீட்டிற்கு வராததால் அவரை உறவினர்கள் தேடிச்சென்றுள்ளனர். அங்கு சடையாண்டி கழுத்து அறுக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்துள்ளார். இதையடுத்து, இச்சம்பவம் குறித்து பட்டிவீரன்பட்டி காவல் துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டது. இவ்வாறு கிடைத்த தகவலின் அடிப்படையில், பட்டிவீரன்பட்டி காவல் துறையினர் கொலையாளியைத் தேடி வந்தனர்.

இந்த விசாரணையில் அதே பகுதியில் வசிக்கும் கருணாகரன் என்பவரின் தம்பி கார்த்திக், சடையாண்டியின் பேத்தியை காதலித்து வந்துள்ளார். இதை அறிந்த சடையாண்டி, இரண்டு தினங்களுக்கு முன்பு கார்த்தியை கண்டித்துள்ளார். இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டதில், சடையாண்டி கார்த்திக்கை தாக்கியதாக கூறப்படுகிறது. பின்னர் கார்த்தியின் அண்ணன் கருணாகரன் குடிபோதையில் தம்பியிடம் தகராறு செய்த சடையாண்டியைத் தேடி, வழக்கமாக அவர் தூங்கிக் கொண்டிருக்கும் இடத்திற்குச் சென்றுள்ளார்.

அப்போது சடையாண்டிக்கும் கருணாகரனுக்கும் ஏற்பட்ட தகராறில், சடையாண்டியை அரிவாளால் கருணாகரன் சரமாரியாக வெட்டியுள்ளார். இந்த படுகொலை தொடர்பாக, பட்டிவீரன்பட்டி காவல் துறையினர் கருணாகரனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின்னர் சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க: அதிமுக ஊராட்சி மன்ற தலைவர் கொலை வழக்கு - 12 பேர் கைது

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.