தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான கோயில்களில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இதற்கிடையில் பழனி தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில், அதன் உபகோயில்கள், கல்லூரிகள், பள்ளிகள் ஆகியவற்றில் வேலை வாங்கித்தருவதாகத் தனிநபர்கள் சிலர் ஏமாற்றுவதாகக் கோயில் நிர்வாகத்திற்குத் தகவல் கிடைத்தது.
இந்நிலையில் இது குறித்து திருக்கோயில் சார்பில் இன்று (ஜூலை 19) வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், "பழனி கோயில், உபகோயில்கள், கல்லூரிகள், பள்ளிகளில் வேலை வாங்கித் தருவதாகத் தெரிவித்து சில தனிநபர்கள் மோசடியில் ஈடுபட்டுவருவதாகத் தகவல் கிடைத்துள்ளன.
பழனி கோயிலில் காலியாக உள்ள பணியிடங்களுக்குப் பத்திரிகைகளில் முறையான அறிவிப்பு வெளியிட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டு சட்டவிதிகளுக்குள்பட்டு தகுதியான நபர்களே பணி நியமனம் செய்யப்படுவார்கள்.
எனவே வேலை வாங்கித் தருவதாகக் கூறும் தனி நபர்களை நம்பி பொதுமக்கள் யாரும் ஏமாற வேண்டாம்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: திண்டுக்கல்லில் அமைச்சர் ஐ.பெரியசாமி ஆய்வு