திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அடுத்துள்ள தாண்டிக்குடியைச் சேர்ந்தவர்கள் செந்தில்குமார், சக்திவேல். இவர்கள் இருவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்ததும், நேற்று இரவு இருவரும் அளவுக்கு அதிகமாக மது அருந்திவிட்டு ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டுக்கொண்டனர்.
இதில் ஆத்திரமடைந்த சக்திவேல், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து செந்தில்குமாரை வயிறு, நெஞ்சு உள்ளிட்ட பகுதிகளில் குத்தியுள்ளார். இதில் ஏற்பட்ட ஆழமான காயத்தினால் செந்தில்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.