திண்டுக்கல், தேனி மாவட்டங்களைச் சேர்ந்த இரண்டாம் நிலை காவலர்களுக்கான தேர்வு நேற்று தொடங்கிய நிலையில் அது வருகின்ற 10ஆம் தேதி வரை திண்டுக்கல் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இதில் இரண்டு மாவட்டங்களைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள் என இரண்டாயிரத்து 551 பேர் பங்கேற்றுள்ளனர். திண்டுக்கல் சரக காவல் துறை தலைவர் (டிஐஜி) ஜோஷி நிர்மல்குமார் மேற்பார்வையில் தேர்வு நடைபெற்றுவருகிறது.
முதல் நாளான நேற்று திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரத்து 36 ஆண்கள் பங்கேற்றுள்ளனர். இவர்களது சான்றிதழ் சரிபார்ப்பு உயரம், மார்பளவு எடுப்பது, 1500 மீட்டர் ஓட்டம் ஆகிய உடற்தகுதி தேர்வு நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளான இன்று தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 835 ஆண்களுக்கு உடற் தகுதித்தேர்வு நடைபெறவிருக்கிறது. மூன்றாவது நாளான நாளை (8ஆம் தேதி) திண்டுக்கல், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த 680 பெண்களுக்கான தேர்வு நடைபெறும். இதனைத் தொடர்ந்து கயிறு ஏறுதல், நீளம் தாண்டுதல் ஓட்டப்பந்தயம் போன்றவை நடைபெறும்.
மேலும் படிக்க: காவலரின் மனிதநேயமிக்க செயலுக்கு குவியும் பாராட்டுகள்!