திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் தாலுகா, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பரப்பலாறு அணை அமைந்துள்ளது. அணையின் மொத்த நீர்மட்டம் 90 அடியாகும். அணையின் மொத்த கொள்ளளவு 195.97 மில்லியன் கனஅடி தற்போது 9.640 மில்லியன் கனஅடி உள்ளது.
சிறுவாட்டுக்காடு, மாட்டுப்பட்டிகாடு, புலிகுத்திக்காடு மலை கிராமங்களில் பெய்த கனமழையின் காரணமாக அணைக்கு 12 கனஅடி நீர்வரத்து அதிகரித்து தற்போது அணையின் நீர்மட்டம் 25 அடியிலிருந்து 53 அடியாக உயர்ந்துள்ளது.
பரப்பலாறு அணையின் மூலம் திண்டுக்கல், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 2,323 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. பரப்பலாறு அணையின் மூலம் ஒட்டன்சத்திரம், சத்திரப்பட்டி, விருப்பாச்சி ஆகிய ஊர்களில் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது. பரப்பலாறு அணை நிரம்பாமல் உள்ளதால் ஒட்டன்சத்திரம் பகுதி விவசாயிகள் கவலையடைந்து வருகின்றனர்.
இதையும் படிங்க: 15 ஆவது நாளாக முழுகொள்ளளவுடன் நீடிக்கும் பவானிசாகர்