திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சம்சுதீன் காலனி, மாணிக்கம் பிள்ளை பேட்டை ஆகிய பகுதியிலிருந்து ஐந்து நபர்கள் டெல்லியில் நடைபெற்ற இஸ்லாமியர்கள் மாநாட்டில் கலந்து கொண்டனர். அதில் கலந்துகொண்ட ஐந்து நபர்களையும் கரோனா தொற்று சோதனை செய்வதற்காக இரண்டு தினங்களுக்கு முன்பு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு மருத்துவ குழுவினர் அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களுக்கு பரிசோதனை செய்ததில் அந்த ஐந்து நபர்களுக்கு கரோனா தொற்று இருப்பதாக நேற்று உறுதி செய்யப்பட்டு அரசு அறிவித்தது.
இந்நிலையில் நேற்று மாலை முதலே சம்சுதீன் காலனியிலிருந்து யாரும் வெளிவராத வண்ணமும், உள்ளிருந்து யாரும் வெளியே போகதது போன்றும் காவல் துறை அந்தப்பகுதியைக் கட்டுக்குள் கொண்டுவந்துள்ளது. அதேபோல் மாணிக்கம் பிள்ளை பேட்டையிலும் இரண்டு இடங்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. அனைவரையும் வீட்டில் பாதுகாப்புடன் இருக்கும் வரையில் சுகாதாரத் துறை, காவல்துறை மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தப்பட்டு 24 மணி நேரமும் காவல் துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது.
மேலும் அங்குள்ளவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களான பால், காய்கறிகளை தள்ளு வண்டிகள் மூலம் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதையும் படிங்க....தடையை மீறுபவர்களுக்கு ராமதாஸ் ட்விட்டரில் வேண்டுகோள்