கேரளாவில் சிறப்பாக கொண்டாடும் திருவிழாவான ஓணம் பண்டிகையினை முன்னிட்டு, தொடர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இத்தொடர் விடுமுறையினை ஒட்டி, பழனி கோயிலுக்கு வெள்ளிக்கிழமையான இன்று(செப்.09) அதிகாலை முதலே கேரள பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மேலும் கர்நாடகா மாநிலத்திலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். அதிகாலை 5 மணிக்கு கோயில் நடைதிறக்கப்பட்டு, விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. தொடர்ந்து விளா பூஜை, சிறுகாலசந்தி பூஜை நடைபெற்றது.
அதிகாலை முதலே கேரள பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் பொதுதரிசனம், சிறப்புகட்டண தரிசனம் உள்ளிட்ட அனைத்து தரிசன வழிகளிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
பக்தர்கள் ரோப்கார் மற்றும் மின் இழுவை ரயிலுக்கு சுமார் மூன்று மணி நேரம் வரையிலும் தரிசனத்திற்கு 2 மணி நேரம் வரையிலும் காத்திருந்து மலைக்கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். கேரள பக்தர்கள் தங்களது முடிக்காணிக்கை செலுத்தும் இடங்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
இதையும் படிங்க: கேரள மாணவிகளின் "சம்மக் சல்லோ" ஓணம்... க்யூட் டான்ஸ்...