ETV Bharat / state

பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்வுக்கிடையே அதிமுக-அமமுகவினரிடையே கைகலப்பு - திண்டுக்கல் மாவட்டச் செய்திகள்

திண்டுக்கல்: அரசு வழங்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பை வாக்கு சேகரிக்கும் நோக்கதோடு அதிமுகவினர் வினியோகம் செய்ததாக அமமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல் அமமுக அதிமுக சண்டை  பொங்கல் பரிசினை வழங்கி அதிமுக  திண்டுக்கல் மாவட்டச் செய்திகள்  dindigul admk and ammk fight pongalgift rationshop
பொங்கல் பரிசினை வழங்கிய அதிமுகவினர்: அமமுகவினருடன் கைகலப்பு
author img

By

Published : Jan 10, 2020, 7:33 AM IST

தமிழர் திருநாளாம் தைத்திருநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசு ரேஷன் அட்டை வைத்திருப்பவர்களுக்கு பச்சரிசி, வெல்லம், திராட்சை, முந்திரி, கரும்பு மற்றும் ஆயிரம் ரூபாய் ஆகியவற்றை பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்படும் என அறிவித்தது. இதற்கான விழா கடந்த மாதம் சென்னையில் நடைபெற்றது.

இதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார். உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றததன் காரணமாக இந்தத் திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், வியாழக்கிழமை முதல் தமிழ்நாடு முழுவதும் உள்ள நியாய விலைக் கடைகள் மூலமாக பொங்கல் பரிசு பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகின்றது. அதன்படி திண்டுக்கல் மாவட்டத்திலும் நியாய விலைக் கடைகள் மூலம் பொங்கல் பரிசு வழங்கப்பட்டது.

பொங்கல் பரிசு வழங்கிய அதிமுக நிர்வாகிகள்

திண்டுக்கல் மாநகராட்சி 19, 20 வார்டுக்கு உட்பட்ட கடை எண் 11A நியாய விலை கடையில் அதிமுகவைச் சேர்ந்தவர்கள் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு மற்றும் ஆயிரம் ரூபாயை வழங்கினர். அரசு வழங்கும் பொங்கல் பரிசை அதிமுகவினர் பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்கும் வகையில் வழங்கக்கூடாது என்று அமமுகவினர், அதிமுகவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் இரு தரப்பினருக்குமிடையே கைகலப்பு ஏற்பட்டதை அடுத்து அங்கிருந்து அதிமுகவினர் வெளியேறினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

இதையும் படிங்க: பொங்கல் பரிசு வழங்க வைத்திருந்த பணம் மாயம் -போலீசார் விசாரணை

Intro:திண்டுக்கல் 09.01.20

திண்டுக்கல்லில் நியாய விலை கடை மூலம் அரசு வழங்கும் பொங்கல் பரிசினை அதிமுகவினர் வழங்கியதால் சர்ச்சை

Body:தமிழர் திருநாளாம் தைப் பொங்கலை முன்னிட்டு தமிழக அரசு நியாயவிலை கார்டு வைத்திருப்பவர்களுக்கு பச்சரிசி, வெல்லம், திராட்சை, முந்திரி, கரும்பு மற்றும் 1000 ரூபாய் என இலவசமாக வழங்கப்படும் என அறிவித்தது. இதற்கான விழா கடந்த மாதம் சென்னையில் நடைபெற்றது. இதில் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கலந்துகொண்டு துவக்கி வைத்தார். உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றததன் காரணமாக இந்த திட்டம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் முடிந்த நிலையில் இன்று முதல் தமிழகம் முழுவதும் உள்ள நியாய விலைக் கடைகள் மூலமாக பொங்கல் பரிசு பொதுமக்களுக்கு வினியோகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. திண்டுக்கல் மாவட்டத்தில் இன்று நியாய விலைக் கடைகள் மூலம் பொங்கல் பரிசு மற்றும் 1000 ரூபாய் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் திண்டுக்கல் மாநகராட்சி 19, 20 வார்டுக்கு உட்பட்ட கடை எண் 11A நியாய விலை கடை பேருந்து நிலையம் அருகே உள்ள மெங்கில்ஸ் ரோட்டில் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆளும் அதிமுக கட்சியை சேர்ந்தவர்கள் பொதுமக்களுக்கு அரசு வழங்கும் பொங்கல் பரிசு மற்றும் 1000 ரூபாய் வழங்கினர்.

அரசு வழங்கும் பொங்கல் பரிசை அதிமுகவினர் பொதுமக்களிடம் வாக்கு சேகரிக்கும் வகையில் இலவசமாக வழங்கக்கூடாது என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் அதிமுகவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் இரு தரப்பினருக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கிருந்து அதிமுகவினர் வெளியேறினார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.