திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கரொனா தடுப்பு பணிகள் குறித்து டிஐஜி முத்துசாமி ஆய்வு மேற்கொண்டார். அன்னைதெரசா மகளிர் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கரோனா சிகிச்சை மையம், ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றில் அமைக்கப்பட்டுள்ள படுக்கை வசதிகளையும் பார்வையிட்டார்.
மேலும் கொடைக்கானலைச் சேர்ந்த பள்ளி மாணவர்களான தருண், பிரசன்னன் ஆகிய இரு மாணவர்கள் இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் புத்தகத்தில் இடம் பெற்று சாதனை புரிந்தமைக்காக நினைவுப் பரிசுகளையும் வழங்கினார். பள்ளி மாணவ, மாணவிகளுடன் இணைந்து கொடைக்கானல் காவல் நிலையத்தில் மரக்கன்றுகளையும் நட்டார்.
இதையும் படிங்க : அமைச்சரவையில் எடுக்கப்பட்ட 6 முக்கிய முடிவுகள் என்னென்ன?