ETV Bharat / state

கால்நடை சந்தை; கடும் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை! - Cows sales

திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் சந்தையில் கால்நடைகள் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்தனர்.

cow-market
author img

By

Published : Jul 15, 2019, 10:11 PM IST

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் கால்நடை சந்தையில் தேனி, கம்பம் உள்ளிட்ட ஏராளமான பகுதிகளிலிருந்து விவசாயிகள், வியாபாரிகள் தங்களது கால்நடைகளை கொண்டுவந்து விற்பனை செய்வதும், அவர்களுக்குத் தேவையான கால்நடைகளை வாங்கிச் செல்வதும் வழக்கம்.

அதேபோல் கேரள மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் இங்கிருந்துதான் மாடுகள் விற்பனையாகி வியாபாரிகள் மூலம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில், சில மாதங்களாக போதிய மழை இல்லாததால் கடுமையான வறட்சி நிலவிவருகிறது. அதனால் கால்நடைகளை வளர்க்க முடியாமல் விவசாயிகள் ஏராளமானோர் தங்களது கால்நடைகளை விற்பனைக்குக் கொண்டுவருகின்றனர்.

ஒட்டன்சத்திரம் கால்நடை சந்தை

அதனால் கால்நடைகளின் வரத்து அதிகரித்து வருவதால் அவற்றின் விலை கடுமையாக குறைந்துள்ளது. குறிப்பாக 50 ஆயிரம் முதல் 60ஆயிரம் விற்றுவந்த வளர்ப்பு பால் பசுமாடுகள் இன்று வெறும் ரூ.40 ஆயிரம் முதல் ரு. 45 ஆயிரம் வரை மட்டுமே விற்பனையானது. அதேபோல வளர்ப்பு பால் எருமை மாடுகள் ரூ.45ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரையிலான விற்பனையிலிருந்து விலை குறைந்து ரூ.35 முதல் ரூ.43ஆயிரம் என விலை இறங்கியது.

வளர்ப்பு கன்றுகள் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரையிலும், பசு கன்றுகள் ரூ.7ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரையிலும் விற்பனையானது. இதனால் விவசாயிகளும், வியாபாரிகளும் பெரும் பாதிப்புக்குள்ளானதாக தெரிவித்தனர்.

Intro:திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தையில் கால்நடைகள் விலை கடுமையாக வீழ்ச்சி விவசாயிகள் பெரும் கவலை அடைந்து குற்றச்சாட்டு.

Body:திண்டுக்கல்.15.07.19
பதிலி செய்தியாளர் எம். பூபதி

ஒட்டன்சத்திரம் கால்நடை சந்தையிலோ கால்நடைகளை கடுமையான வீழ்ச்சி விவசாயிகள் பெரும் கவலை.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் வாராவாரம் திங்கட்கிழமை நடைபெறும் கால்நடை சந்தை மிகவும் பிரசித்தி பெற்றதாகும் .
இந்த சந்தைக்கு திண்டுக்கல், தேனி, கம்பம், போடி, தாராபுரம், பழனி காங்கயம், வெள்ளக்கோவில், கரூர், ஆகிய பகுதிகளில் இருந்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தங்களது கால்நடைகளை ஒட்டன்சத்திரம் கால்நடை சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்வதும் அவர்களுக்கு தேவையான கால்நடைகளை வாங்கிச் செல்வதும் வழக்கமாகும் அதனால் இந்த சந்தைக்கு பல பகுதிகளில் இருந்து வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் கால்நடைகளை வாங்கி வருவார்கள் .

அதேபோல் கேரள மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் இறைச்சிக்காக இங்கு இருந்துதான் எட்டு மாடுகள் விற்பனை ஆகி வியாபாரிகள் மூலம் ஏற்றுமதி அவரது வழக்கம் இந்நிலையில் ஒட்டன்சத்திரம் மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களில் கடந்த சில மாதங்களாக போதிய மழை இல்லாததால் கடுமையான வறட்சி நிலவி வருகிறது .

அதனால் கால்நடைகளுக்கு தேவையான தீவனங்கள் மற்றும் குடிநீர் போன்ற பிரச்சனைகள் இங்கே அதிகமாக நிலவுதல் விவசாயிகள் தங்களது கால்நடைகளை வளர்க்க முடியாமல் ஏராளமான விவசாயிகள் கால்நடை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர் .

அதனால் அதிகப்படியான வரவு வருவதால் அவற்றின் விலை இங்கே கடுமையாக குறைந்துள்ளது குறிப்பாக 50 ஆயிரம் முதல் 60 ஆயிரம் வரை விற்றுவந்த வளர்ப்பு பால் பசுமாடுகள் இன்று வெறும் 40 ஆயிரம் முதல் 45 ஆயிரம் ரூபாய் மட்டுமே விற்பனையானது அதேபோல் 45 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை விற்பனையான வளர்ப்பு பால் எருமை மாடுகள் என்று விலை குறைந்து 35 முதல் 43 ஆயிரம் வரை விலை போனது அதேபோல் வளர்ப்பு கண்கள் 10 முதல் 12 ஆயிரம் வரையிலும் 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் வரை பசு கன்றுகள் விலை போனது அதேபோல் இறைச்சிக்காக விற்பனை ஆகும் கால்நடைகள் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை விற்பனையாகி ஏற்றுமதியானது அவற்றின் விலையும் குறைந்து நல்ல காய்கறிகள் 12,000 முதல் 15,000 வரை விற்பனையானது அதனால் கால்நடைகளை வளர்க்க முடியாமல் விற்பனைக்கு கொண்டு வந்த விவசாயிகளும் பல பகுதிகளில் கால்நடைகளை சந்தைகளில் வாங்கி எங்கு கொண்டு வந்து வியாபாரிகளும் போதிய விலைக்கு விற்க முடியாமல் மிகவும் குறைந்து விலைக்கு விற்று சென்றவர் இதனால் விவசாயிகள் வியாபாரிகள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருவதாக தெரிவிகின்றனர்.

பேட்டி: மாரிமுத்து_ விவசாயி

Conclusion:திண்டுக்கல் அருகே உள்ள ஒட்டன்சத்திரம் கால்நடை சந்தைக்கு வரும் கால்நடைகள் வரத்து அதிகரிப்பினால் போதிய விலை கிடைக்கவில்லை என விற்பனை செய்ய வரும் வியாபாரிகளும் விவசாயிகளும் தெரிவித்துள்ளனர்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.