ETV Bharat / state

பழனி முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம்

இரண்டு மாதங்களுக்குப் பிறகு, இன்று (ஜூலை 5) முதல் பழனி மலை கோயிலில், சாமி தரிசனத்திற்காக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பழனி முருகன் கோயில்  திண்டுக்கல் பழனி முருகன் கோயில்  கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி  பக்தர்கள் அனுமதி  தரிசனம்  கோயில்கள் திறப்பு  devotees invading to visit palani murugan temple  palani murugan temple  palani murugan temple open  devotees invading to visit  temples are opened  dindigul news  dindigul latest news
பக்தர்களுக்கு அனுமதி
author img

By

Published : Jul 5, 2021, 7:02 PM IST

Updated : Jul 5, 2021, 9:04 PM IST

திண்டுக்கல்: தமிழ்நாட்டில் கரோனா பெருந்தொற்றின் இரண்டாம் அலை காரணமாக, கோயில்கள் கடந்த 2 மாதங்களாக மூடப்பட்டுள்ளன.

இந்நிலையில் தற்போது கரோனா தொற்று குறைந்துவருவதால், வழிபாட்டுத் தலங்கள் திறக்கலாம் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து இன்று (ஜூலை 5) முதல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கோயில்களும் திறக்கப்பட்டன.

கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் அனுமதி

6 மணி முதல் பக்தர்கள் அனுமதி

அந்த வகையில் முருகனின் ஆறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சாமி கோயில் இன்று (ஜூலை 5) முதல் திறக்கப்பட்டது. இதனையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளுடன் காலை 6 மணி முதல் பக்தர்கள் கோயிலுக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

பக்தர்கள் படிவழிப்பாதையில் சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். அன்னதானம், ரோப்கார் ஆகிய சேவை நிறுத்தப்பட்டுள்ளது. மின் இழுவை, ரயில் சேவை மட்டும் இயக்கப்படுகிறது.

உணர்ச்சி மிகுதியுடன் தரிசனம்

மேலும் விபூதி, பஞ்சாமிர்தம் ஆகிய பிரசாதங்கள் பக்தர்களுக்கு வழங்கப்படவில்லை. இணையதளம் மூலம் பதிவுசெய்து கோயிலுக்கு வரும் பக்தர்கள், ஒரு மணிநேரத்திற்கு ஆயிரம் பேர் வீதம் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

இதையும் படிங்க: 11ஆவது திருமணநாளைக் கொண்டாடும் தோனி - சாக்‌ஷி தம்பதி

Last Updated : Jul 5, 2021, 9:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.