ETV Bharat / state

கணவர் இறப்பு குறித்து வழக்குத்தொடர்ந்த மனைவி - ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு! - Madras Court

மருத்துவமனையில் உயிரிழந்தவரை அடையாளம் கண்டு குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்காமல் அநாதை இறக்கச்செய்ததற்காக பாதிக்கப்பட்டவரின் குடும்பத்துக்கு 15 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை நீதிமன்றம்
சென்னை நீதிமன்றம்
author img

By

Published : Jul 21, 2022, 8:35 PM IST

சென்னை: திண்டுக்கல் மாவட்டம், கொக்கரவலசு கிராமத்தில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் வசித்து வந்தவர் ஆறுமுகம். 2014ஆம் ஆண்டு அக்டோபர் 31ஆம் தேதி சொந்த ஊரான திருப்பூர் மாவட்டம் கிருஷ்ணாபுரம் கிராமத்தில் வசிக்கும் பெற்றோரைச் சந்திக்க தனது இருசக்கர வாகனத்தில் சென்றார்.

வழக்கமாக, இரண்டு மூன்று நாள்களில் வீடு திரும்பும் அவர் பல நாள்களாக வீடு திரும்பாமல் மாயமானர். இதனால், அவரது மனைவி முத்துலட்சுமி, கீரனூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அத்துடன் திருப்பூர் மாவட்டம், குடிமங்கலம் காவல் நிலையத்திலும், கனியூர் காவல் நிலையத்திலும் விசாரித்தபோது, ஆறுமுகம் பற்றி எந்த தகவலும் இல்லை எனத் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து கணவரைத் தேடி வந்த நிலையில், 13 நாள்களுக்கு பின் கணவரின் சடலம் கோவை அரசு மருத்துவமனையில் இருப்பதாக குடிமங்கலம் காவல் துறையினருக்குத் தெரியவந்தது. அதன் பின் அங்கு சென்று கணவர் உடலை முத்துலட்சுமி பெற்றார்.

கணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தது குறித்து உரிய நேரத்தில் தகவல் தெரிவித்திருந்தால் அவரை காப்பாற்றியிருக்க முடியும் எனக்கூறி, அவரது மரணத்துக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கக்கோரியும், கணவரின் இறப்பு குறித்து விசாரிக்கக்கோரியும் முத்துலட்சுமி 2017ஆம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சந்திரசேகரன், 'சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டிருந்த நாள்களில் பல நாள்கள் ஆறுமுகம் சுய நினைவுடன் இருந்திருக்கிறார். அவரை அடையாளம் தெரியாதவர் என சிகிச்சை அளித்த கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையும், வழக்குப்பதிந்து விசாரணை நடத்திய காவல் துறையும் கடமை தவறியதால், ஆறுமுகம் அநாதையாக இறந்திருக்கிறார்' என வேதனைத் தெரிவித்தார்.

மேலும் அவர், 'ஆறுமுகத்தின் விவரங்களைத் தெரிந்து, மனைவிக்குத்தகவல் தெரிவித்திருந்தால், அவர் சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுத்திருப்பார் அல்லது இறக்கும் தருவாயில் குடும்பத்தினர் அவர் அருகில் இருந்திருப்பார்கள். அடிப்படை உரிமையை மீறிய இச்செயலால், முத்துலட்சுமியின் குடும்பத்தினருக்கு பெருத்த மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

இதனால், 15 லட்சம் ரூபாய் இழப்பீடாகவும், இந்த வழக்குத்தொடர்ந்த நாளில் இருந்து உத்தரவு பிறப்பித்த நாள் வரைக்கும் 6 விழுக்காடு வட்டியுடன் மூன்று மாதங்களில் வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.

தவறினால், இந்த உத்தரவு பிறப்பித்த நாளில் இருந்து 12 விழுக்காடு வட்டியுடன் இழப்பீட்டை வழங்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி, இழப்பீட்டுத்தொகையை சம்பந்தப்பட்ட காவல் துறையினரிடம் இருந்தும், மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியரிடம் இருந்தும் வசூலித்துக்கொள்ளலாம் எனவும் உத்தரவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: கள்ளக்குறிச்சி மாணவி மரணத்திற்கு வாட்ஸ்அப் மூலம் போராட்டம் நடத்த முயன்ற 2 பேர் கைது!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.