ETV Bharat / state

கரோனா இல்லா கொடைக்கானலின் ரகசியம் என்ன?

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா தீநுண்மி பாதிப்பு இருக்கும் நிலையிலும், கொடைக்கானலில் தொற்று இல்லாததற்கு, என்ன காரணமாகயிருக்கும் என்பதை அலசுகிறது இந்தச் சிறப்புத் தொகுப்பு.

கரோனா இல்லா கொடைக்கானலின் ரகசியம் என்ன?
கரோனா இல்லா கொடைக்கானலின் ரகசியம் என்ன?
author img

By

Published : Apr 28, 2020, 9:15 AM IST

Updated : May 1, 2020, 4:02 PM IST

கரோனா பெருந்தொற்று நாளுக்கு நாள் தமிழ்நாட்டில் தனது ஆதிக்கத்தை அழுந்தப் பதித்துவரும் நிலையில், சில பகுதிகளில் மட்டும் அதனால் நுழையமுடியவில்லை. திண்டுக்கல் மாவட்டம் கரோனா பாதிப்பில், 7ஆம் இடத்தைப் பிடித்து, 80 பேருக்கு கரோனா சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. ஆனால், மலைகளின் அரசியான கொடைக்கானல், கரோனாவுக்கு எதிராகச் சிறப்பாகப் போராடி தனித்துநிற்கிறது.

கொடைக்கானல்
கொடைக்கானல்

சர்வதேச சுற்றுலாத் தலமான கொடைக்கானலில் கரோனா வைரஸ் பரவாமல் தடுக்க கூடுதல் கவனம் எடுத்து, மாவட்ட நிர்வாகம் அன்றாட நிலவரத்தைத் தினமும் கேட்டு அலுவலர்களிடமிருந்து ஆலோசனைகளைப் பெற்று துரிதமாகச்செயல்படுத்தியது. அரசுக்குப் பொதுமக்கள் கொடுத்த ஒத்துழைப்பு, தற்சார்பு வாழ்க்கை முறை காரணமாகக் கரோனா இல்லாத பகுதியாகக் கொடைக்கானல் திகழ்கிறது.

மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கை

மலைகளின் இளவரசியான கொடைக்கானலில், உள்ளூர்வாசிகளைப் போலவே, வெளிநாட்டினர், வெளிமாநிலத்தவர் நடமாட்டம் அதிகம் காணப்படும். கரோனா குறித்த பரபரப்பு உருவான மார்ச் மாதமே, நடவடிக்கையில் இறங்கியது மாவட்ட நிர்வாகம்.

கொடைக்கானல்
கொடைக்கானல்

கொடைக்கானலில் இருக்கும் அனைத்து சுற்றுலாத் தலங்களையும் உடனடியாக மூடியது. வெளியாள்கள், வெளிநாட்டுப் ப‌ய‌ணிக‌ள் நகருக்குள் நுழைவதற்குத் தடைவிதிக்கப்பட்டது. அதேபோல கொடைக்கானலில் தங்கியிருந்த வெளிநாட்டினரையும் உடனடியாக வெளியேற்றியது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பிறகு ஊருக்குத் திரும்பிய உள்ளூர்வாசிகள், சுமார் 1,200 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்புக்குள் கொண்டுவரப்பட்டார்கள்.

இதனால் கரோனா பரவல் தவிர்க்கப்பட்டது. குறிப்பாக, கொடைக்கான‌ல் எல்லைப் ப‌குதிகளில் தொடர் சோதனை, கண்காணிப்பு நடைபெற்றது. கரோனா தொற்று ப‌ரவிய‌ நாள் முத‌ல் நகராட்சி நிர்வாகம், சுகாதாரத் துறையின் துரித நடவடிக்கை, பெருந்தொற்று யாருக்கும் இல்லை என்பதை உறுதிசெய்தது.

அரசு அலுவலர்கள், பொதுமக்கள், சுற்றுச்சூழல், வாழ்வியல் முறைகள் என அனைவரும் ஒருங்கிணைந்து, கரோனாவைத் தடுக்க உதவியுள்ளனர்.

தற்சார்பு பொருளாதாரமும் கரோனாவும்

கொடைக்கானல் மலையில் ம‌ருத்துவ‌ குண‌ம் அதிக‌ம்வாய்ந்த‌ பூண்டு, மிளகு போன்ற பயிர்கள் அதிகம் விளைகின்றன. ஆதலால், கொடைக்கான‌ல் மக்களின் உணவில் இவை கட்டாய அங்கமாக இருந்துவருகின்றன.

கொடைக்கானல்
கொடைக்கானல்

மேல்மலை, கீழ்ம‌லை கிராம மக்கள் இன்றுவரை தற்சார்பு வாழ்க்கை வாழ்ந்துவருகிறார்கள். அவர்களுக்குத் தேவையான காய்கறிகள் அனைத்தையும் அவர்களே விளைவித்துக் கொள்கிறார்கள். இது அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு வலிமைச் சேர்க்கிறது.

இது மட்டுமன்றி சாலை வ‌ச‌திக‌ள் இல்லாத‌ ஆதிவாசி ம‌லைகிராம‌ங்க‌ளுக்கு, அர‌சு அலுவலர்க‌ளும் த‌ன்னார்வ‌ல‌ர்களும் ம‌க்க‌ள் நட‌மாட்ட‌த்தைக் க‌ட்டுப்ப‌டுத்த‌ அவ‌ர‌வ‌ர் பகுதிக‌ளுக்குச் சென்று தகுந்த இடைவெளியைப் பின்ப‌ற்றி நிவார‌ண‌ பொருள்க‌ளை வ‌ழ‌ங்கிவ‌ருகின்றன‌ர். கொடைக்கானல் முழுவதும் காவ‌ல் துறை மூலம் முழுக்க‌ட்டுப்பாடு விதிக்க‌ப்ப‌ட்டு 24 ம‌ணி நேர‌மும் க‌ண்காணிக்க‌ப்ப‌டுகிற‌து.

தமிழர்களின் வாழ்க்கை முறை பெரும்பாலும், உணவே மருந்து என்பதாகயிருந்தது. இதனால், பலதரப்பட்ட நோயையும் எதிர்க்கும் சக்தியை இயல்பாகவே பெற்றிருந்தனர். ஆனால், தற்போதைய காலக்கட்டத்தில் பாரம்பரிய உணவை மறந்து, மக்கள் துரித உணவுகளை நாடிச்சென்றுவிட்டனர். விளைவு, நோயெதிர்ப்புச் சக்திக்கு மாத்திரை, மருந்து எடுத்துக் கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்.

கரோனா இல்லா கொடைக்கானலின் ரகசியம் என்ன? - சிறப்பு தொகுப்பு

தற்சார்பு வாழ்க்கை முறை, இயற்கை உணவுகளின் முக்கியத்துவத்தை மறந்தவர்களை மீண்டும் மரபை நோக்கிச் செல்ல வாய்ப்பளித்திருக்கிறது கரோனா. கொடைக்கானலில் கரோனாவை விரட்டியடிக்க முடிந்ததன் ரகசியமும் அதுதான், தற்சார்பு வாழ்க்கைமுறை!

இதையும் படிங்க: உழைக்கிறதுதான் நிம்மதியா இருக்கு - ஊரடங்கில் பணியாற்றும் வாட்ச்மேன் தாத்தா!

Last Updated : May 1, 2020, 4:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.