திண்டுக்கல் மாவட்டத்தில் இயங்கிவரும் ஜிடிஎன் கலைக்கல்லூரியில் இளங்கலை உடற்கல்வியியல் இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டிருப்பவர் தீபக்குமார். இவர் ஆசனங்களை ஆணி படுக்கையில் படுத்து சாதனை நிகழ்த்தும் நிகழ்ச்சி இன்று கல்லூரி அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை நோபல் புக் வேர்ல்டு ரெக்கார்டு பதிவு செய்வதற்காக அதன் இந்திய இயக்குநர் அரவிந்த், தமிழ்நாடு பதிவாளர் வினோத் ஆகியோர் வருகை தந்து பதிவு செய்தனர்.
![100 Yoga Pose College Student World Record](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/4648935_dhindukal-1-2.bmp)
இதையடுத்து, தீபக்குமார் ஆணிப்படுக்கையில் 100 ஆசனங்களை செய்து காட்டினார். முதலில் 50 ஆசனங்களை 15 நிமிடத்தில் முடித்து இதற்கு முந்தைய சாதனையான 28.2 நிமிடத்தில் 50 ஆசனங்கள் செய்த சாதனையை முறியடித்ததோடு புதிய உலக சாதனையாக 38 நிமிடங்கள் 40 நொடியில் 100 ஆசனங்களை செய்து சாதனை படைத்துள்ளார்.
இவரின் இந்த சாதனை வரும் டிசம்பர் மாதம் வெளியிடப்பட உள்ள நோபல் புக் ஆப் வேர்ல்ட் ரெக்கார்டு புத்தகத்தில் இரண்டு பக்கங்களில் வெளியிடப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை திண்டுக்கல் மாவட்ட யோகா சங்க தலைவர் ராஜகோபால், செயலாளர் நித்தியாராஜேஸ்வரன் ஆகியோர் ஒருங்கிணைப்பு செய்திருந்தனர்.
இதையும் படிங்க: நாசா நடத்திய சர்வதேச போட்டி: சத்தியமங்கலம் பள்ளி மாணவ மாணவியர் சாதனை!