திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகள் ரசிக்கும் இடமாக பிரையண்ட் பூங்கா உள்ளது.
இங்கு கரோனா தொற்று காரணமாக, மலர்க் கண்காட்சி ரத்து செய்யப்பட்டது.
தற்போது அரசின் அனுமதியுடன் பிரையண்ட் பூங்காவில் 59ஆவது மலர்க் கண்காட்சியை முன்னிட்டு 2ஆம் கட்ட நடவுப்பணிகள் தொடங்கின. ஊட்டியில் இருந்து கொண்டு வரப்பட்ட சுமார் 1 லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு வருகின்றன.
குறிப்பாக அஷ்டமேரியா உள்ளிட்ட மலர்ச் செடிகள், பாத்திகள் அமைத்து பராமரிக்கப் படுகின்றன.
நடவு செய்யப்பட்டு வரும் மலர்ச் செடிகள் வரும் ஏப்ரல், மே மாத சீசன்களில் பூத்துக்குலுங்குமென எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: புதுச்சேரி மலர் கண்காட்சி:சுற்றுலாப் பயணிகள் ஆர்வம்!