திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் முக்கிய சுற்றுலா தலமாக பிரையண்ட் பூங்கா அமைந்துள்ளது. இங்கு சுற்றுலாப்பயணிகளை கவரும் விதத்தில் பல்வேறு வண்ணங்களில் பூக்கள் பூத்து குலுங்கும்.
இந்நிலையில், கரோனா தொற்று காரணமாக ஊரடங்கு பிறபிக்கப்பட்டத்தால் மூடப்பட்ட பூங்காவானது தற்போது சில தளர்வுகளுடன் திறக்கப்பட்ட நிலையில் சுற்றுலாப்பயணிகள் மெல்ல மெல்ல வரத் தொடங்கியுள்ளனர்.
மற்ற சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடி உள்ள நிலையில் பூங்காக்களில் மட்டுமே சுற்றுலா பயணிகள் நேரம் செலவு செய்து வருகின்றனர். மேலும் பிரையண்ட் பூங்காவில் சுற்றுலா பயணிகளை கவர கண்ணாடி மாளிகை அமைந்துள்ளது.
இந்த மாளிகையில் அறிய வகை மலர் செடிகள், கற்றாழை செடிகள் உள்ளன. இந்தக் கண்ணாடி மாளிகை சேதமடைந்து, இதில் இருக்கும் கண்ணாடிகள் உடைந்தும் காணப்படுகிறது.
மேலும் கண்ணாடி மாளிகை உள்ளேயும் பூச்செடிகள் பராமரிக்கப்படுவதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே பிரையண்ட் பூங்காவில் அமைந்துள்ள கண்ணாடி மாளிகையை பராமரிக்க வேண்டுமென சுற்றுலாப்பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: இராமநாதபுரத்தில் 2 குழந்தைகளை கொலை செய்த தாய் கைது!