ETV Bharat / state

குடை கொண்டு வந்தால் தான் மதுபானம் - காவல் கண்காணிப்பாளர் அதிரடி! - டாஸ்மாக் கடைகள்

திண்டுக்கல்: மதுபானம் வாங்க வருபவர்கள் குடை கொண்டு வந்தால் தான் மதுபானம் வழங்கப்படும் என்று அம்மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார்.

குடை கொண்டு வந்தால் தான் மதுபானம்
குடை கொண்டு வந்தால் தான் மதுபானம்
author img

By

Published : May 8, 2020, 6:04 PM IST

ஊரடங்கு உத்தரவு காரணமாக, தமிழ்நாட்டில் 45 நாள்களுக்குப் பிறகு நேற்று மதுபானக் கடைகள் திறக்கப்பட்டன. தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்து மதுப்பிரியர்கள், மதுபானம் வாங்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. இருப்பினும் பல்வேறு மாவட்டங்களில் இயங்கும் மதுபான கடைகளில் தகுந்த இடைவெளியை மக்கள் கடைப்பிடிக்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்ததுள்ளது.

அதேபோன்று திண்டுக்கல் மாவட்டத்தில் மதுபானம் வாங்கச் சென்ற மதுப்பிரியர்களும் தகுந்த இடைவெளியைக் கடைப்பிடிக்கவில்லை. இதையறிந்த திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல், மதுபானம் வாங்க வருபவர்கள் கண்டிப்பாக குடையுடன் வந்தால் மட்டுமே மதுபாட்டில் வழங்கப்படும் என்று உத்தரவிட்டுள்ளார்.

குடை கொண்டு வந்தால் தான் மதுபானம்

இதைத்தொடர்ந்து மதுப்பிரியர்கள், ஒவ்வொருவரும் இன்று மதுபான கடைக்கு குடையுடன் வந்தனர். அங்கு தகுந்த இடைவெளியைக் கடைப்பிடித்து மதுவை வாங்கிச்சென்றனர்.

இதையும் படிங்கள்: தடைசெய்யப்பட்ட நத்தம் பகுதியில் தடுப்புகள் அகற்றம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.