திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த சில நாள்களாக விட்டு விட்டு மழை பெய்துவந்தது. நேற்று (ஜன.11) இரவு முழுவதும் கனமழை கொட்டி தீர்த்தது.
இன்று (ஜன.12) அதிகாலை முதல் மிதமான மழை பெய்துவருகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஏரி பகுதியில் பலத்த காற்று வீசுவதால் படகு சவாரி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தற்போது சுற்றுலாத் தலங்களில் பயணிகள் வருகையின்றி வெறிச்சோடி காணப்படுகின்றன.
இதையும் படிங்க: கர்நாடகாவில் சொகுசு படகு இல்லம் சேவை தொடக்கம்