திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் நேற்று (ஜூலை 29) அதிகாலை பிச்சைக்காரர் ஒருவர் இறந்து கிடந்தார். தகவலறிந்த வடக்கு காவல் ஆய்வாளர் உலகநாதன், காவலர்கள் இறந்தவரின் உடலைக் கைப்பற்றி திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக அனுப்பிவைத்தனர்.
இச்சம்பவம் குறித்து திண்டுக்கல் நகர் வடக்கு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டதில், பிச்சைக்காரரிடம் இருந்த பையை பறிக்கும்போது நடந்த தகராறில், அவரை கீழே தள்ளிவிட்டு பல் துலக்கும் பிரஷால் வாயில் குத்தி கொலை செய்ததாக தெரியவந்தது.
மேலும், இதுகுறித்து திண்டுக்கல் பிள்ளையார் பாளையத்தை சேர்ந்த ஒருவரையும், பழனி, ராமநாதபுரத்தை சேர்ந்த இருவரையும் பிடித்து காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: 'இருசக்கர வாகனங்கள் திருட்டு - சிசிடிவி மூலம் சிக்கிய திருடன்'