ETV Bharat / state

இரண்டு லட்ச ரூபாய்க்கும் மேல் ஏலம் போன அவகோடா: விவசாயிகள் மகிழ்ச்சி!

திண்டுக்கல்: அவகோடா மரம் ரூ.2 லட்சத்திற்கும் அதிகமாக ஏலம் போனது அப்பகுதி விவசாயிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அவகோடா
author img

By

Published : Apr 26, 2019, 4:05 PM IST

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மற்றும் அதன் சுற்று வட்டார மலை கிராமங்களான பூலத்தூர், தாண்டிக்குடி , பேத்துபாறை உள்ளிட்ட பல கிராமங்களில் அவகோடா விவசாயம் செய்து வருகின்றனர்.

பல்வேறு மருத்துவ குணம் கொண்ட அவகோடா மரங்கள் அதிக விலைக்கு ஏலம் போவது வழக்கம். ஆனால் முதல் முறையாக கொடைக்கானலில் உள்ள ஒரு அவகோடா மரம் ரூ.2.45 லட்சத்திற்கு ஏலம் போயுள்ளது.

இது குறித்து அப்பகுதி விவசாயி ஒருவர் கூறும்போது, ’விவசாயிகள் பலரும் தற்போது பணப் பயிரான அவகோடாவை வளர்த்து வருகின்றனர். கொடைக்கானலின் சிறப்பான அவகோடா மரம் ரூ.2.45 லட்சத்திற்கு ஏலம் போயுள்ளது. ஆனால், தற்போது அவகோடா நோய் தாக்குதலால் சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. அதனால் அவகோடா விவசாயத்தை நோய் தாக்குதலில் இருந்து காக்க வேளாண்துறை அதிகாரிகள் முன் வர வேண்டும்’ என கோரிக்கை வைத்துள்ளார்.

திண்டுக்கல் 

ஒரு வருடத்திற்கு 2 லட்சத்திற்கு மேல் விலைபோயுள்ள  அவகோடா  மரம். 

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மற்றும் சுற்று வட்டார மலை கிராமங்களான பூலத்தூர், தாண்டிக்குடி , பேத்துபாறை உள்ளிட்ட பல கிராமங்களில் அவகோடா விவசாயம் செய்து வருகின்றனர். அனைத்து சத்துகளும் கொண்ட இந்த மருத்துவ குணம் கொண்ட அவகோடா மரங்கள் அதிக விலையில் ஏழம் போவது வாடிக்கை.  தற்போது மிக பெரிய சாதனையாக கொடைக்கானலில் உள்ள ஒரு அவகோடா மரம் 2.45 லட்சத்திற்க்கு ஏழம் போயுள்ளது. பண பயிரான இந்த அவகோடாவை தற்போது பல தரப்பினரும் வளர்த்து  வருகின்றனர். மேற்கு தொடர்ச்சி மலை சிறப்பான அவகோடா தற்போது நோய் தாக்குதலால் சரிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்த பழத்தையும், அவகோடா விவசாயத்தை நோய் தாக்குதலில் இருந்தும் காக்க வேளாண் துறை அதிகாரிகள் முன் வர வேண்டும் என மலை கிராம விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

பேட்டி

கோபாலகிருஷ்னன் - பூலத்தூர்
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.