ETV Bharat / state

Video:நடுரோட்டில் கொலைவெறியுடன் சண்டையிட்டுக்கொண்ட ஆட்டோ ஓட்டுநர்கள்! - ஆட்டோ ஓட்டுநர்கள் தெருச் சண்டை

கொடைரோட்டில் ஆட்டோ டிரைவர்கள் நடுரோட்டில் கட்டிப்புரண்டு கொலைவெறியுடன் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடுரோட்டில் கொலைவெறிச் சண்டையிட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் : பொதுமக்கள் அலறி ஓட்டம்

author img

By

Published : Sep 1, 2022, 4:39 PM IST

திண்டுக்கல்: கொடைரோடு பஸ் நிலையம் எதிரே ஆட்டோ ஸ்டாண்டில், இரு ஆட்டோ ஓட்டுநர்கள் குடி போதையில் அரை நிர்வாணமாக ஒருவரையொருவர் கொலைவெறியுடன் தாக்கிக்கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

அப்போது, ஏதேனும் கொலை நிகழ்ந்துவிடுமோ என்ற அச்சத்தில், அப்பகுதி மக்கள் பீதியில் பயந்து, அலறி ஓடினர். இதுகுறித்து தகவலறிந்த அம்மைநாயக்கனூர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

இந்த சண்டையில் ஈடுபட்டது, உச்சணம்பட்டியைச்சேர்ந்த ஆட்டோ டிரைவர் பால்பாண்டியும், பொம்மனம்பட்டியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் சண்முகராஜா என்பவரும் தான் என்பது காவல் துறையினர் விசாரணையில் தெரியவந்தது. பட்டப்பகலில் நடுரோட்டில் ஆட்டோ டிரைவர்கள் கட்டிப்புரண்டு கொலை வெறியுடன் தாக்கிக்கொண்ட சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

கொடைரோடு பஸ் நிலையம் எதிரே உள்ள இந்த ஆட்டோ ஸ்டாண்டில் 20-ற்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் நிற்கின்றன. அடிக்கடி குடிபோதையில் ஆட்டோ டிரைவர்கள் இதுபோன்று கட்டிப்புரண்டு அரை நிர்வாணத்தில் சண்டை போடுவதால், இந்தப் பகுதியில் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ மாணவிகளும், கடைக்கு வரும் பொதுமக்கள் மற்றும் பூ வியாபாரிகளும், விவசாயிகளும், அரசு அலுவலர்களும் பெரும் அச்சத்தில் உள்ளனர்.

இந்த ஆட்டோ ஸ்டாண்டை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நடுரோட்டில் கொலைவெறியுடன் சண்டையிட்டுக்கொண்ட ஆட்டோ ஓட்டுநர்கள்: பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்

இதையும் படிங்க: பழனி சண்முகாநதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு...கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.