ETV Bharat / state

நர்சிங் கல்லூரி விடுதியின் 3ஆவது மாடியில் இருந்து குதித்து மாணவி தற்கொலை - இந்திய ஜனநாயக மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்

நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்த மாணவி மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்ததாக கூறப்பட்ட நிலையில், மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Feb 26, 2023, 7:44 PM IST

திண்டுக்கல்: ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கேதையுறும்பு பழைய பட்டியைச் சேர்ந்தவர் கூலி தொழிலாளி கன்னியப்பன். இவரது மகள் கார்த்திகா ஜோதி(18). இவர், திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் சாலையிலுள்ள காமாட்சிபுரம் பிரிவு அருகே தனியாருக்குச் சொந்தமான சக்தி நர்சிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு கல்லூரி விடுதியில் தங்கி படித்து வந்தார்.

இந்த நிலையில் பிப். 21ஆம் தேதி விடுதியின் மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறி ஒட்டன்சத்திரம் தனியார் மருத்துவமனையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையில் இருந்த அவர் இன்று (பிப்.26) உயிரிழந்தார்.

இதையடுத்து கார்த்திகாதேவியின் உடலை திண்டுக்கல் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூராய்வுக்காக கொண்டுவரப்பட்டது. இந்நிலையில், தனியார் நர்சிங் கல்லூரி மற்றும் திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் காவல் துறையினர் குவிக்கப்பட்டனர்.

மேலும், மாணவியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் மருத்துவமனை முன்பு சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். மாணவி உயிரிழந்த சம்பவம் குறித்து ஒட்டன்சத்திரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: தென்காசி அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் தற்கொலை!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.