திண்டுக்கல்: எம்.வி.எம். அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் வாக்கு செலுத்திய அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், மக்கள் ஆதரவோடு ஹாட்ரிக் வெற்றி பெறுவோம் என்றார்.
தமிழ்நாடு முழுவதும் ஒரே கட்டமாக இன்று சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. திண்டுக்கல் சட்டப்பேடவைத் தொகுதியில் இரண்டாம் முறையாக தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் போட்டியிடுகிறார். இவர் இன்று காலை எம்.வி.எம். அரசினர் மகளிர் கலைக் கல்லூரியில் தனது வாக்கினை பதிவு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழ்நாட்டில் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் 130 முதல் 150 தொகுதிகளில் மக்கள் ஆதரவுடன் வெற்றி பெறுவோம். ஹாட்ரிக் வெற்றியுடன் அதிமுக ஆட்சி மீண்டும் அமைய உள்ளது என்றார்.