ETV Bharat / state

முகக்கவசம் அணியாமல் வந்த அதிதி பாலனுக்கு அபராதம்! - கொடைக்கானலில் அதிதி பாலன்

திண்டுக்கல்: கொடைக்கானலுக்கு முகக்கவசம் இன்றி வந்த அருவி பட நடிகை அதிதி பாலனுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Actress Aditi Balan fined for not wearing face mask in Kodaikanal
Actress Aditi Balan fined for not wearing face mask in Kodaikanal
author img

By

Published : Oct 17, 2020, 6:30 PM IST

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் வார விடுமுறையை முன்னிட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை சற்று அதிகரித்து காணப்படுகிறது. கொடைக்கானலுக்கு தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வரத் தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில், கொடைக்கானல் ஏரி சாலை பகுதியில் சுகாதாரத் துறையினர் மற்றும் மருத்துவத் துறையினர் முகக் கவசம் இன்றி வருபவர்களுக்கு அபராதம் விதித்து வந்தனர். இதனிடையே, 'அருவி' பட நடிகை அதிதி பாலன் சுற்றுலாவிற்காக கொடைக்கானல் வந்துள்ளார். அப்போது முகக் கவசம் இன்றி வாகனத்தில் வந்த அதிதி பாலனிடம் அபராதம் விதிக்க விவரங்கள் கேட்டபோது அலுவலர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

முகக்கவசம் அணியாமல் வந்த அதிதி பாலனுக்கு அபராதம்

தொடர்ந்து அப்பகுதியில் மருத்துவத்துறை மற்றும் சுகாதாரத்துறையினர் அபராதம் விதித்ததை செய்தி சேகரித்துக் கொண்டிருந்த செய்தியாளரிடம் தன்னை வழக்கறிஞர் என்றும் காவல் நிலையத்திற்கு வாருங்கள் என்றும் மிரட்டியுள்ளார். இதனிடையே அலுவலர்க‌ளால் நடிகை அதிதி பாலனுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

இதையும் படிங்க: கங்கனா மீது வழக்குப்பதிவு செய்ய நீதிமன்றம் உத்தரவு

ABOUT THE AUTHOR

author-img

...view details

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.