திண்டுக்கல்: வேடசந்தூர், எரியோடு, கோவிலூர் உள்ளிட்ட பகுதிகளில் சிலர் மதுபானம் விற்பனை செய்வதாக தொடர் குற்றச்சாட்டு எழுந்தது.
இது குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவித்தனர்.
இந்நிலையில் அய்யலூர் அருகே துமிச்சிக் குளம் பகுதியில் பணத்தை வாங்கிக் கொண்டு மதுபானம் கொடுக்கும் பெண்ணின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
அப்பெண் விற்பனை செய்வது போலி மதுவா இல்லை கடையில் வாங்கியதா என்பது தெரியவில்லை. இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: சென்னையில் இருந்து சேலம், கோவை வழியாக சபரிமலை சிறப்பு ரயில் - தெற்கு ரயில்வே அறிவிப்பு!