ETV Bharat / state

குடிபோதையில் நண்பர்களுக்கு இடையே தகராறு - ஒருவர் பலி - தகராறில் வாலிபர் கத்தியால் குத்தி படு கொலை

திண்டுக்கல் நகரில் குடிபோதையில் நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் இளைஞர் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

திண்டுக்கல்லில் குடிபோதையில் நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் வாலிபர்- ஒருவர் பலி

author img

By

Published : Jul 29, 2022, 1:06 PM IST

திண்டுக்கல்: அடுத்து வேடபட்டியைச் சேர்ந்த சந்தியாகு என்பவரது மகன் அருள் குணசேகரன் (37). மரம் வெட்டும் தொழிலாளி. நேற்று இரவு வேடபட்டி எரிவாயு தகனம் அருகே, நண்பர்களுடன் அருள் குணசேகரன் மது அருந்தியுள்ளார். அப்போது நண்பர்களுக்குள் மது போதையில் வாக்கு வாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த நண்பர்கள் அருள் குணசேகரனை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இவரது அலறல் சத்தம் கேட்டு அங்கு வந்தவர்கள், இரத்த வெள்ளத்தில் கிடந்த அருள் குணசேகரனை டூவீலரில் தூக்கி கொண்டு திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட எஸ்பி பாஸ்கரன் மருத்துவமனையில் விசாரணை மேற்கொண்டார். மேலும் சம்பவ இடத்தில் டவுன் டிஎஸ்பி கோகுலகிருஷ்ணன், மற்றும் இன்ஸ்பெக்டர் இளஞ்செழியன் விசாரணை நடத்தினர்.

இது தொடர்பாக திண்டுக்கல் நகர் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். படு கொலை செய்யப்பட்ட அருள் குணசேகரன், லிடியா மேரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு 3 பெண் குழந்தைகள் உள்ளனர்.

இதையும் படிங்க:செஸ் ஒலிம்பியாட்: செஸ் போர்டு முதல் போட்டி முடிவுகள் வரை... எல்லாமும் இதோ...!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.