ETV Bharat / state

வட மாநில இளைஞரை கத்தியால் குத்தி கொலை... போலீசார் தீவிர விசாரணை - A gang of four members stabbed a young man to death near Palani

பழனி அருகே வட மாநில இளைஞரை நான்கு பேர் கொண்ட கும்பல் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வட மாநில இளைஞரை கத்தியால் குத்தி கொலை
வட மாநில இளைஞரை கத்தியால் குத்தி கொலை
author img

By

Published : Aug 22, 2022, 7:04 AM IST

பழனி : மேற்கு வங்காளத்தை சேர்ந்த ஜெயந்த் சமந்தா(34) என்பவர் பழனி அடிவாரம் வள்ளியப்பா கார்டன் பகுதியில் உள்ள வீட்டிலேயே டெய்லர் தொழில் செய்து வருகிறார்.

இந்நிலையில் வழக்கம்போல் நேற்று(ஆக.20) பணியை முடித்துவிட்டு வீட்டிலேயே தூங்கியுள்ளார். அப்போது இவர் வீட்டுக்கு சென்ற அடையாளம் தெரியாத நான்கு பேர் கொண்ட கும்பல், ஜெயந்த் சமந்தாதை கத்தியால் சரமாரியாக குத்தியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

அவரது வீட்டில் தங்கி இருந்தவர்கள் பழனி அடிவாரம் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து அங்கு சென்ற காவல்துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

இதையும் படிங்க: முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டி கொலை... பதறவைக்கும் வீடியோ...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.