திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் முக்கிய சுற்றுலாத் தலமாக இருந்து வருகிறது. இங்குவரும் சுற்றுலாப் பயணிகளை கவரும் முக்கிய அம்சமாக நட்சத்திர ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியே கொடைக்கானல் மக்களின் வாழ்வாதாரமாகவும் இருக்கிறது. இந்த நட்சத்திர ஏரியை மக்களின் தேவைக்காக அப்போதைய மதுரை மாவட்ட ஆட்சியர் சர் ஹென்றி லிவிங்ச் உருவாக்கினர்.
இந்நிலையில் சர் ஹென்றி லிவிங்ச் 200ஆவது பிறந்தநாள் சுற்றுலாத்துறை சார்பில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக அவரின் கொள்ளு பேரன் நிக்கோலஸ் லிவிங்ச் இங்கிலாந்து நாட்டிலிருந்து வந்திருந்தார்.
கொடைக்கானல் கலையரங்கம் பகுதியில் இருந்து தார தப்பட்டைகள் முழங்க பள்ளி கல்லூரி மாணவ-மாணவிகள் ஏரியை பாதுகாக்க வேண்டுமென ஊர்வலமாகச் சென்றனர். நகராட்சி அலுவலகம் அருகேயுள்ள ஹென்றியின் நினைவு தூண் அருகே மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அவரின் பிறந்தநாளை தொடர்ந்து ஓவியப் போட்டி, பேச்சுப் போட்டி உள்ளிட்டவைகள் நடத்தப்பட்டு, பரிசுகளும் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க:ரயில் தவறி விழ இருந்த பயணியை காப்பாற்றிய தலைமை காவலருக்கு பாராட்டு