ETV Bharat / state

திண்டுக்கல் பட்டாசு குடோன் விபத்து: தம்பதி உயிரிழப்பு - தீயணைப்புத் துறை

செம்பட்டி அருகே பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் கட்டட இடுபாடுகளுக்கு இடையே சிக்கிய தம்பதி உயிரிழந்தனர்.

பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் உயிரிழப்பு

author img

By

Published : Jan 18, 2023, 10:38 AM IST

திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அருகே பட்டிவீரன்பட்டியை சேர்ந்த செல்வம் என்பவருக்கு சொந்தமான கட்டடத்தில் இந்து முன்னணி கட்சியின் மேற்கு மாவட்ட செயலாளர் ஜெயராமன் என்பவர் 10 வருடங்களாக ஸ்ரீ மதுரை மீனாட்சி அம்மன் என்ற பெயரில் பட்டாசு கடையை நடத்தி வந்தார். இந்த பட்டாசு கடையின் மேல் மாடியில் ஜெயராம் (40) அவரது மனைவி நாகராணி (35) மற்றும் தீபிகா(7) கனிஷ்கா(5) மோகன்(4) ஆகிய மூன்று குழந்தைகளுடன் வந்தார்.

இந்த கடையில் நேற்று மாலை 5 மணி அளவில் தீ பற்றி வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது கட்டடம் சரிந்து விழுந்துள்ளது. அந்த நேரத்தில் ஜெயராம், நாகராணி வீட்டில் இருந்தால் இடிபாடுகளுக்குள் சிக்கினர். இவரது குழந்தைகள் கீழே சாலையோரமாக விளையாடிக் கொண்டிருந்தால் விபத்தில் சிக்கவில்லை.

பட்டாசு குடோனில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 பேர் உயிரிழப்பு

இந்த விபத்தில் ஜெயராமன், நாகராணி இருவரும் உயிரிழந்தனர். தகவல் அறிந்து மீட்பு பணியில் ஈடுப்பட்ட காவல் துறையினரும் தீயணைப்புத் துறையினரும் 6 மணி நேரத்திற்கு பின் உடல்களை மீட்டனர். திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று தீவிர விசாரணையில் ஈடுபட்டார். ஊரக வளர்ச்சிதுறை அமைச்சர் ஐ.பெரியசாமி சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார். இந்த சம்பவம் குறித்து செம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.