திண்டுக்கல்: பன்னியாமலை கிராமத்தைச் சேர்ந்த வீர சின்னு என்பவருக்குச் சொந்தமான வேளாண் நிலத்தில் 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பு சுற்றித் திரிந்தது.
இதைப் பார்த்த பொதுமக்கள் நத்தம் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் அளித்தனர். அதன்பேரில் அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் பாம்பினை பத்திரமாகப் பிடித்து வனத் துறையினரிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து அதை அருகிலுள்ள பூலான்மலை பகுதியில் உள்ள உயரமான இடத்தில் பாதுகாப்பாக வனத் துறையினர் விட்டனர்.