தருமபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் கிராமப்பகுதியைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவி ஒருவர், அப்பகுதியிலுள்ள அரசு பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இவரது உறவினரான கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியை சேர்ந்தவர் மூர்த்தி ( 24). இவர் மாணவியின் வீட்டு நிகழ்ச்சிக்காக கடந்த ஜூலை 1ஆம் தேதி வந்துள்ளார்.
அப்போது மாணவியை கடைக்கு கூட்டி செல்வதாக கூறிவிட்டு, கடத்தி சென்றதாக சொல்லப்படுகிறது. இதையடுத்து சிறுமியின் பெற்றோர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்காததால், மகேந்திரமங்கலம் காவல் நிலையத்தில் இதுகுறித்து புகார் அளித்தனர்.
இந்தப் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சூளகிரி பகுதிக்கு மாணவியை கடத்தி சென்ற இளைஞரை கைது செய்து, மாணவியை மீட்டனர். இதுகுறித்து காவல்துறை மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், மாணவி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து மாணவியை கடத்தி சென்ற இளைஞரை போக்ஸோ சட்டத்தின் கீழ் கைது செய்த பாலக்கோடு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர், மூர்த்தியை தருமபுரி கிளை சிறையில் அடைத்தார்.
பாதிக்கப்பட்ட பள்ளி மாணவி தருமபுரியிலுள்ள பெண்கள் காப்பகத்திற்க்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
இதையும் படிங்க: பாலியல் வன்கொடுமையை எதிர்த்து குரல் கொடுங்கள் - சனம் ஷெட்டி