ETV Bharat / state

தருமபுரி வாக்குச்சாவடியில் தீக்குளிக்க முயன்ற இளைஞரால் பரபரப்பு

author img

By

Published : Apr 18, 2019, 8:00 PM IST

தருமபுரி: வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வந்த இளைஞர், திடீரென உடல் மீது பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தீக்குளிக்க முயற்சித்த இளைஞர்

தருமபுரி அருகே இலக்கியம்பட்டியில் உள்ள வாக்குச்சாவடி மையத்தில் காலை முதல் பொதுமக்கள், நீண்ட வரிசையில் நின்றபடியே தங்களுடையை வாக்கினை பதிவு செய்தனர். இந்நிலையில் வாக்களிக்க வந்த இளைஞர் ஒருவர், தனக்கு ஓட்டுப் போட பிடிக்கவில்லை என கூறி திடீரென தலையில் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்தார்.

அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் காவல்துறையினர், இளைஞரை தடுத்து கையில் இருந்த பெட்ரோல் கேனை பறித்தும், அவர் மீது தண்ணீரை ஊற்றியும் காப்பாற்றினர். இந்த தீக்குளிப்பு முயற்சி சம்பவத்தால் வாக்குச்சாவடி நுழைவாயிலில் பரபரப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்திற்கு பின்னர், அந்த இளைஞரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

எனக்கு ஓட்டுப் போடவே பிடிக்கவில்லை. தனக்கு பெண் கொடுக்க யாரும் முன்வரவில்லை. நான் சென்னையில் சமையல் கலைஞராக பணிபுரிகிறேன். நான் நல்லவன் என்பதை எங்களது உரிமையாளர் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகதான் செய்தேன் என சம்பந்தம் இல்லாமல் முன்னுக்குப்பின் முரணாக தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார். உடனடியாக காவல்துறையினர் அந்த இளைஞரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். விசாரணையில், அவர் மொரப்பூர் பகுதி எலவடை கிராமத்தைச் சார்ந்த நவமணி என்பவரின் மகன் சீனு(28) என தெரியவந்தது.

தர்மபுரி அருகே வாக்குச்சாவடியில் தீக்குளிக்க முயன்ற இளைஞரால் பரபரப்பு.தர்மபுரி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட தர்மபுரி ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ளஇலக்கியம்பட்டி வாக்கு பதிவு மையம் அருகே இளைஞர் ஒருவர் தனக்கு ஓட்டுப் போட பிடிக்கவில்லை என கூறி திடீரென தலையில் பெட்ரோல் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்தார்.இளைஞர் தீக்குளிக்க முயற்சி செய்ததை பார்த்த அங்கிருந்த பொதுமக்களும் பாதுகாப்புக்காக வந்திருந்த காவல்துறையினரும் அவர் கையிலிருந்த பெட்ரோல் நிரப்பப்பட்ட கேனை எடுத்து அப்புறப்படுத்தி அவர் மீது தண்ணீரை ஊற்றினர். இச்சம்பவத்தால் வாக்குசாவடி நுழைவாயிலில் பரபரப்பு ஏற்பட்டது.சிறிது நேரம் கழித்து அந்த இளைஞரிடம் எதற்காக இங்கு வந்தாய் என கேட்டதற்கு எனக்கு ஓட்டுப் போடவே பிடிக்கவில்லை என கூறி முன்னுக்குப் பின் முரணாக பேசிக் கொண்டிருந்தார். இதனால் கோபமுற்ற அருகிலிருந்தவர்கள் கோபமடைந்து அவரை தாக்கினர்.தொடர்ந்து பேசிய அந்த இளைஞர் தனக்கு பெண் கொடுக்க யாரும் முன் வரவில்லை தான் சென்னையில் செப்  ஆக பணிபுரிகிறேன் .எனக்கூறி அந்த இளைஞர் நான் நல்லவன் என்பதே எங்களது உரிமையாளர் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக தான் செய்தேன் என முன்னுக்குப்பின் முரணாக தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார் உடனடியாக காவல்துறையினர் அந்த வாலிபரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர் விசாரணையில் அவர் பெயர் மொரப்பூர் பகுதி எலவடை கிராமத்தைச் சார்ந்த நவமணி என்பவரின் மகன் சீனு வயது 28 என தெரியவந்தது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.