காவிரி கரையோர பகுதிகள் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தின் அஞ்செட்டி, பிலிகுண்டு, லு.தேன்கனிக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரு தினங்களாக மழை பெய்து வருகிறது.
இதனால் ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று(அக்.03) நீர்வரத்து 10 ஆயிரம் கன அடியாக இருந்த நிலையில், இன்று(அக்.04) 11 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது. இதனால் ஒகேனக்கல் பகுதியில் சுற்றுலா பயணிகள் குளிக்க, தடை விதிக்கப்பட்டுள்ளது.