ETV Bharat / state

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 28 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு - பரிசல் இயக்க தடை

தருமபுரி: காவிரியிலிருந்து ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து 28 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளதால் காவிரி ஆற்றில் குளிக்கவும் பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது.

hogenakkal
author img

By

Published : Sep 5, 2019, 11:41 AM IST

தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்து இன்று 28 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. நேற்று 12 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து அதிகரித்து 28 ஆயிரம் கனஅடியாக வந்துகொண்டிருக்கிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கே.ஆர்.எஸ். அணைகளின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் கனமழை பெய்துவருகிறது. இந்த நிலையில், கபினி அணையிலிருந்து இன்று 30 ஆயிரம் கனஅடி, கே.ஆர்.எஸ். அணையிலிருந்து 24 ஆயிரம் கனஅடி என காவிரி ஆற்றில் மொத்தம் 54 ஆயிரம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. கர்நாடக அணைகளிலிருந்து திறந்துவிடப்பட்ட காவிரிநீர் நாளை தமிழ்நாடு எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஒகேனக்கல்லில் கரைபுரண்டு ஓடும் காவிரி நீர்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில், 29ஆவது நாளாக ஆற்றில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. கடந்த சில தினங்களாக கோத்திகல் பாறையிலிருந்து பரிசல் இயங்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்திருந்தது. இதனால் சுற்றுலாப் பயணிகள் பரிசலில் சென்று ஒகேனக்கல் மெயின் அருவியை பார்த்து ரசித்தனர். தற்போது மீண்டும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது. இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

Intro:tn_dpi_01_hoganakkal_vis_7204444

Body:tn_dpi_01_hoganakkal_vis_7204444

Conclusion:ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து 28 ஆயிரம் கன அடியாக உயர்வு. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் குளிக்க மற்றும் பரிசல்இயக்கதடை .    தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் ஒகேனக்கல்  காவிரி ஆற்றில் வரும் நீர்வரத்து 28 ஆயிரம் கன அடியாக உயர்ந்துள்ளது.ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று 12 ஆயிரம் கன அடியாக தண்ணீர் வரத்து இருந்தது தற்போது நீர்வரத்து 16 ஆயிரம் கனஅடி நீர் உயர்ந்து 28 ஆயிரம் கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது.கர்நாடக மாநிலத்தில் தற்போது மழை பெய்து வருவதால் கர்நாடக அணைகளானகபினி அணையில் இருந்து இன்று 30ஆயிரம் கன அடி நீரும் கேஎஸ்ஆர் அணையில் இருந்து 24 ஆயிரம் கனஅடி நீரும் என காவிரி ஆற்றில் 54 ஆயிரம் கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. கர்நாடக அணையில் இருந்து திறந்து விடப்பட்ட காவிரிநீர் நாளை பிலிகுண்டுலு வந்து அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒகேனக்கல் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து உயர்ந்ததன் காரணமாக 29-வது நாளாக குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. கடந்த சில தினங்களாக கோத்திகல்  பாறையிலிருந்து பரிசல்  இயங்க மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது இதனால் சுற்றுலா பயணிகள் பரிசலில் சென்று ஒகேனக்கல் மெயின் அருவி பார்த்து ரசித்தனர். தற்போது தண்ணீர் வரத்து அதிகரித்ததால் ஒகேனக்கலில் குளிக்க மற்றும் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. தடைகாரணமாக ஒகேனக்கல்லுக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.