ETV Bharat / state

குடிநீர் வழங்கக் கோரி தருமபுரி ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

தருமபுரி: குப்பூரில் குடிநீர் வழங்கக் கோரி கிராம மக்கள் காலிக் குடங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்தினர்.

போராட்டம்
author img

By

Published : May 14, 2019, 10:47 AM IST

தருமபுரி அடுத்த குப்பூர் ஊராட்சியில் பெரிய குரும்பட்டி கிராமத்தில் சுமார் 1000 குடும்பங்கள் வசித்துவருகின்றன. இந்த கிராம மக்களின் தேவைக்காக ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டுவந்துள்ளது. கடந்த ஆண்டு பருவமழை பொய்த்துப்போனதன் காரணமாக தருமபுரி மாவட்டத்தில் கடுமையான வறட்சி ஏற்பட்டு குரும்பட்டி கிராமத்தில் குடிநீர் தட்டுப்பாடு நிலவிவந்துள்ளது.

கடந்த சில மாதங்களாக இந்த கிராம மக்கள் குடிநீருக்காக சுமார் ஐந்து கிமீ தூரம் நடந்துசென்று பனந்தோப்பின் ஒகேனக்கல் குழாயிலிருந்து வெளியேறும் தண்ணீரை எடுத்து வந்துள்ளனர். இந்த குடிநீர் தட்டுப்பாட்டை போக்க மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலர்களிடமும் கிராம மக்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர். ஆனால் அரசுத் தரப்பில் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

குடிநீர் வழங்க கோரி தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவுலகத்தில் முற்றுகை போராட்டம்

இதனால் ஆத்திரமடைந்த 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் காலிக்குடங்களுடன் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

உடனடியாக குடிநீர் வழங்குவதற்கு ஏற்பாடு செய்து தருவதாக காவல் துறையினர் உறுதி அளித்ததைத் தொடர்ந்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு திரும்பிச் சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தருமபுரி அருகே முறையாக குடிநீர் வழங்ககோரி, கிராம மக்கள் காலி குடங்களுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி.
தருமபுரி அடுத்த குப்பூர் ஊராட்சியில் பெரிய குரும்பட்டி கிராமத்தில் சுமார் 1000 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராம மக்களின் தேவைக்காக ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. 
கடந்த ஆண்டு பருவமழை பொய்த்து போனதன் காரணமாக தருமபுரி மாவட்டத்தில் கடுமையான வறட்சி ஏற்பட்டது. இதனால் குரும்பட்டி கிராமத்தில்  குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக இந்த கிராம மக்கள் குடிநீருக்காக சுமார் 5 கிமீ தூரம் நடந்து சென்று பனந்தோப்பு பகுதியில், ஒகேனக்கல் குழாயிலிருந்து வெளியேறும் தண்ணீரை எடுத்து வந்து வடி கட்டி குடித்து வருகின்றனர். இந்த குடிநீர் தட்டுப்பாட்டை போக்க மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைத்து அரசு அதிகாரிகளிடமும் கோரிக்கை மனு அளித்துள்ளனர். ஆனால் அரசு தரப்பில் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. 
இதனால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் 100- க்கும் மேற்பட்டோர் காலிகுடங்களுடன் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து முற்றுகையிட முயன்றனர். தொடர்ந்து காலிக்குடங்களுடன் வந்த பெண்களை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். பொதுமக்கள் இடையே பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறை மற்றும் தருமபுரி வட்டார வளர்ச்சி அலுவலர் உடனடியாக குடிநீர் வழங்குவதற்கு ஏற்பாடு செய்து தருவதாக  உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து பெண்கள் போராட்டத்தை கைவிட்டு திரும்பிச் சென்றனர். தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடிநீர் கேட்டு பெண்கள் காலி குடங்களுடன் முற்றுகையிட வந்ததால், அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.