ETV Bharat / state

இது வீடா.. இல்ல சரக்கு குடோனா?.. பெட்டி பெட்டியாக பீர் பாட்டில்கள் - அடித்து நொறுக்கிய பெண்கள் - liquor bottles in Dharmapuri Papparapatti village

தருமபுரி அருகே ஒயின் ஷாப்பிலும் கிடைக்காத சரக்குகளை எல்லாம் மூட்டை மூட்டையாக வீடொன்றில் பதுக்கி விற்று வந்த நிலையில், 'பொருத்து இருந்தது போதும் பொங்கியெழு' என பீர் உள்ளிட்ட மதுபான பாட்டில்களை அடித்து நொறுக்கி உடைத்த பெண்களின் வீடியோ வேகமாக பரவி வருகிறது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Apr 29, 2023, 5:33 PM IST

Updated : Apr 29, 2023, 7:47 PM IST

தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அடுத்த புதிநத்தம் கிராமத்தில் சட்டவிரோதமாக மது விற்பனையை தடுத்து மது பாட்டில்களை அழித்த பெண்கள்

தருமபுரி: தருமபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி சுற்றுப்புற பகுதிகளில் உள்ள கிராமங்களில் மது பிரியர்கள் 15 கிலோ மீட்டர் பயணம் செய்து பாப்பாரப்பட்டிக்கு வந்து மதுபானங்களை வாங்கி செல்கின்றனர். பாப்பாரப்பட்டி பகுதியை சுற்றியுள்ள பூதி நத்தம், பெரியூர், பிக்கிலி, கொல்லப்பட்டி, புதுகரம்பு உள்ளிட்ட மலைக்கிராமத்தைச் சார்ந்த ஒரு சிலா் டாஸ்மாக் மதுபான கடையில் மதுபானங்களை மொத்தமாக வாங்கி அவற்றை பெட்டி பெட்டியாக தங்கள் வீடுகளில் வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

இது குறித்து பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் பல முறை புகார் அளித்தும் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், அப்பகுதியில் பீர் விற்பனை கொடிகட்டி பறக்கின்றன என்றும் இதனால், பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் பல மாணவர்கள் இவற்றை குடித்து சீரழிந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த நிலையில், தருமபுரி மாவட்டம் பாப்பாரப்பட்டி அடுத்த புதிநத்தம் கிராம மக்கள் சட்ட விரோதமாக வீட்டில் வைத்து மதுபானம் விற்ற ஜெயராமன் என்பவர் வீட்டை இன்று (ஏப்.29) முற்றுகையிட்டு வீட்டிலிருந்த மதுபானங்களை பெண்கள் ஆவேசமாக தூக்கி சாலையில் எறிந்து அடித்து உடைத்தனர். இதனால், அப்பகுதியில் உள்ள சாலைகளில் மதுபானம் ஆறாக வழிந்து ஓடியது. இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்தனர். இதனைத்தொடர்ந்து, மற்றொரு வீட்டில் பொட்டி பொட்டியாக இருந்த பீர் பாட்டில்களை போலீசார் கைப்பற்றி அதனை அவர்களது வாகனத்தில் ஏற்றிச் சென்றனர்.

இதையும் படிங்க: தேர்வு தோல்வியால் விரக்தி - ஆந்திராவில் 9 மாணவர்கள் தற்கொலை!

வெயில் காலம் என்பதால் மது பிரியர்கள் அதிகமாக விரும்பும் பீர் வகைகளை வாங்கி பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. டாஸ்மாக் மதுக்கடைகளில் கூட கிடைக்காத பிராண்டுகள் இங்கு கிடைப்பதால் 24 மணி நேரமும் உள்ளூரில் விற்பனை செய்யப்படும் சட்ட விரோத மதுபானத்தை வாங்கி குடித்து மது போதையிலேயே சுற்றி திரிவதாகவும் வருந்துகின்றனர். இதனால் குடும்பங்களில் அதிகமாக சண்டை வருவதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இதற்கிடையே, இவற்றையெல்லாம் கண்டும் காணாமல் உள்ள காவல்துறையினர் இந்த சம்பவத்திற்கு பிறகு, இது போன்ற குற்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

பெட்டி பெட்டியாக வீட்டில் வைத்து பீர் விற்பனை செய்து வந்த நிலையில், அவற்றை கண்டு பொங்கியெழுந்த பெண்கள் அந்த வீட்டையே புரட்டிப்போட்டு பீர் உள்ளிட்ட மதுபானங்களை அடித்து துவம்சம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: வாங்காத பொருட்களுக்கு பில்.. ரேஷன் கடை ஊழியர்களுக்கு அரசு வார்னிங்!

Last Updated : Apr 29, 2023, 7:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.