தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அருகேயுள்ள ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் இன்று (பிப். 11) தை அமாவாசையை முன்னிட்டு தங்களது மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க ஏராளமான சுற்றுலாப் பயணிகள் அதிகாலை முதலே குவிந்தனா்.
இதையடுத்து, பொதுமக்கள் காவிரி கரையோரப் பகுதியில் மூதாதையர்களுக்கு தர்ப்பணம் வழங்கி வழிபாடு நடத்தினர்.
மேலும் அமாவாசை தினம் என்பதால் தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி மாவட்டங்களிலிருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஒகேனக்கல்ல்ல் குவிந்து காவிரி ஆற்றில் புனித நீராடி வழிபாடு நடத்தினர். ஒகேனக்கல் பகுதிக்கு நீா்வரத்து குறைந்த அளவே வருவதால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்தனா்.
இதையும் படிங்க: ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து 3 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு!