தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் சுற்றுலா தலத்தில் இன்று காலை முதலே வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிய தொடங்கியுள்ளனர். ஆயுத பூஜை சரஸ்வதி பூஜை தொடர் விடுமுறை என்பதால் ஏராளமானோர் ஒகேனக்கல் பகுதிக்கு சுற்றுலா வந்துள்ளனர்.
சுற்றுலா பயணிகள் மசாஜ் செய்து கொண்டு ஒகேனக்கல் மெயின் அருவியில் குளித்தும் பரிசல் மூலம் மெயின் அருவி சினி அருவி பகுதிகளை கண்டு உற்சாகமடைந்தனர்.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த எட்டு மாதங்களாக வெறிச்சோடிய ஒகேனக்கல் இன்று மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. சுற்றுலா பயணிகள் வருகையையொட்டி காவல்துறையினர், தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
தற்போது கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 7091 கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. கர்நாடகா தமிழ்நாடு காவிரி கரையோரப்பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக நீா்வரத்த 17 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது.
இதையும் படிங்க: ’ஆட்சி மாறினால் ஒகேனக்கல் சர்வதேச சுற்றுலாத்தலம்’ - திமுக எம்பி. உறுதி