தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் காவிரி ஆற்றிற்கு சுற்றுலா பயணிகள் வருகை தவருவது வழக்கம். அதன்படி, சேலம் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் பகுதியை சேர்ந்த ரியாசுதீன் என்பவர் வார விடுமுறையை கொண்டாட ஒகேனக்கல்லுக்கு குடும்பத்துடன் இன்று (நவம்பர் 22) வந்தார்.
ஒகேனக்கல் அடுத்த ஆலம்பாடி பகுதியில் குளித்துக் கொண்டிருக்கும் போது, எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்றதால் ரியாசுதீன் மனைவி அபிதா(38) அவரது மகள் அபிஷா பார்த்திமா (14), அவரது மகன் முகம்மது நவாஸ் (10) தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இது குறித்து ஒகேனக்கல் காவல் நிலையத்தில் ரியாசுதீன் புகார் அளித்தார் இதனையடுத்து காவல்துறைனர் மற்றும் தீயணைப்பு துறையினர் உதவியுடன் உடலை தேடி வந்தனர். இதில் அபிதா, முகமது நவாஸ் ஆகியோரின் உடல்கள் கைப்பற்றப்பட்டன.
இருப்பினும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட அபிஷா பார்த்திமா உடலை தீயணைப்பு துறையினர் தேடி வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:கள்ளக்குறிச்சியில் 5 பவுன் தங்க நகை கொள்ளை!